- Home
- Astrology
- Chanakya Niti: திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கணுமா? சாணக்கியர் கூறும் இந்த 4 விஷயங்களை மட்டும் பின்பற்றுங்க.!
Chanakya Niti: திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கணுமா? சாணக்கியர் கூறும் இந்த 4 விஷயங்களை மட்டும் பின்பற்றுங்க.!
Chanakya Niti for successful marriage life: திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதற்கு தேவையான நான்கு ரகசியங்களை சாணக்கியர் தனது நீதி சாஸ்திர நூலில் குறிப்பிட்டுள்ளார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சாணக்கியர் கூறும் அறிவுரைகள்
இந்திய வரலாற்றில் சாணக்கியர் சிறந்த ஞானியாக விளங்கினார். இவர் திருமண உறவு பலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க தனது சாணக்கிய நீதியில் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் திருமண வாழ்க்கை சுமூகமாக நடக்க வேண்டுமெனில் சாணக்கியரின் இந்த நான்கு முக்கிய விஷயங்களை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
1.பரஸ்பரம் மரியாதை அளித்தல்
சாணக்கியரின் கூற்றுப்படி கணவன் மனைவி உறவில் மரியாதை மிகவும் அவசியம். வண்டி ஓடுவதற்கு இரண்டு சக்கரங்கள் தேவைப்படுவது போல திருமண உறவில் இருவரும் சமமானவர்களே. உங்கள் துணையின் கருத்துக்கள், எண்ணங்கள், உணர்வுகளுக்கு எப்போதும் மரியாதை கொடுங்கள். வயதில் பெரியவராக இருந்தாலும் சிறியவராக இருந்தாலும் உறவுகளில் மரியாதை குறையக் கூடாது. தம்பதிகளுக்கு இடையேயான மரியாதையான உறவு தான் பிணைப்பை பாதுகாத்து, அதை மேலும் பலப்படுத்தும். மரியாதை இருக்கும் இடத்தில் அன்பு தானாக பெருகும்.
2.தனிப்பட்ட ரகசியங்களை பாதுகாத்தல்
ஒவ்வொரு தம்பதிகளுக்கும் அவர்களுக்கென்று சில தனிப்பட்ட ரகசியங்கள் இருக்கும். இந்த ரகசியங்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியமென்று சாணக்கியர் கூறுகிறார். கணவன் மனைவி தங்கள் தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயங்களை எந்த ஒரு மூன்றாம் நபரிடமோ, நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ ஒருபோதும் பகிர்ந்து கொள்ள கூடாது. ரகசியங்களை பகிர்வது நம்பிக்கைக்கு இழுக்கு ஏற்படுத்தும். ரகசியங்களை பாதுகாப்பது உறவின் பலத்தையும், நம்பிக்கையையும் அதிகரிக்கும். இதுவே மகிழ்ச்சியான திருமண வாழ்வின் அடித்தளமாகும்.
3.அகங்காரத்தை தவிர்த்தல்
திருமண உறவில் இருக்கும் பெரிய எதிரி அகங்காரமாகும். ஈகோ வளர ஆரம்பித்தால் உறவு சரியத் தொடங்கும் என்று சாணக்கியர் கூறுகிறார். கணவன் மனைவி இருவரும் தனி நபர்கள் அல்ல, மாறாக குழு உணர்வுடன் செயல்பட வேண்டும். எல்லா வேலைகளையும், எந்த ஒரு பெரிய முடிவுகளையும் சேர்ந்தே எடுக்க வேண்டும். அகங்காரம் இல்லாத இடத்தில் மட்டுமே வெளிப்படையான உரையாடலும் அன்பான அணுகுமுறையும் இருக்கும். ஒருவரிடம் மற்றொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது, அனுசரித்து செல்வது அல்லது சரணாகதி அடைவது தாழ்வான காரியம் அல்ல. மாறாக அது உறவை வளப்படுத்தும்.
4.பொறுமையுடன் செயல்படுதல்
திருமண வாழ்க்கையின் வெற்றிக்கு கணவன் மனைவி இருவரிடமும் பொறுமை இருப்பது மிகவும் அவசியம் என்று சாணக்கியர் கூறுகிறார். வாழ்க்கையில் என்ன நடந்தாலும், அது கஷ்டமான நேரமாக இருந்தாலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு கொடுத்து பொறுமையுடன் அதிலிருந்து வெளியேற வேண்டும். பாதகமான சூழ்நிலையில் நிதானம் இழந்து, கட்டுப்பாடு இல்லாமல் செயல்பட்டால் உறவுகள் சீர்குலைந்து விடும். பொறுமையாக இருக்கும் தம்பதிகள் மட்டுமே எந்த ஒரு சவாலையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு, தங்கள் உறவை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.
சாணக்கியர் கூறும் இந்த நான்கு விஷயங்களை ஒரு தம்பதிகள் வாழ்க்கையில் கடைபிடித்தால் அவர்களின் இல்லற வாழ்க்கை என்றென்றும் ஆனந்தமாகவும், எந்த பிரச்சனையும் இல்லாத சமூகமான பாதையில் செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)