MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Budhaditya Rajyog 2026: கையில் பணப்புழக்கம்! புதாதித்ய ராஜயோகத்தால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் எவை?

Budhaditya Rajyog 2026: கையில் பணப்புழக்கம்! புதாதித்ய ராஜயோகத்தால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் எவை?

Budhaditya Rajyoga: மே 15 முதல் ரிஷப ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. மே 29 வரை நீடிக்கும் இந்த யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வம், பதவி உயர்வு அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.

2 Min read
Author : vinoth kumar
Published : May 08 2026, 08:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
புதாதித்ய ராஜயோகம்
Image Credit : Magic decor

புதாதித்ய ராஜயோகம்

ஜோதிடத்தில் புதன் (அறிவாற்றல் மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணி) மற்றும் சூரியன் (ஆற்றல், கௌரவம் மற்றும் ஆன்மாவின் காரணி) ஆகிய இரு கிரகங்களும் ஒரே ராசியில் இணைந்திருப்பதே புதாதித்ய ராஜயோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ராஜயோகமானது செல்வம், வெற்றி மற்றும் முன்னேற்றத்தை தருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மே 15 சூரியன் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகி, அங்கு ஏற்கனவே இருக்கும் புதனுடன் இணைவதால் ரிஷப ராசியில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த அபூர்வ சேர்க்கை மே 29 வரை நீடிக்கும் என்பதால், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கப் போகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரிஷபம்: கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்
Image Credit : Asianet News

ரிஷபம்: கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்

உங்கள் ராசியின் முதல் வீட்டிலேயே சூரியன், புதன் ஒன்றிணைவதால் இந்த யோகம் உருவாவதால், தொட்டதெல்லாம் துலங்கும் காலம் இது. பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பதவி உயர்வு தேடி வரும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். புதிய முதலீடுகள் மூலம் லாபம் பெருகும். இந்த ராசிக்காரர்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும்.

35
சிம்மம்: கௌரவமும் பதவியும் தேடி வரும்
Image Credit : Asianet News

சிம்மம்: கௌரவமும் பதவியும் தேடி வரும்

சிம்ம ராசியின் 10-வது வீட்டில் சூரியன், புதன் ஒன்றிணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் அமைவதால், உங்கள் ஆளுமைத் திறன் வெளிப்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு மழையில் நனைவீர்கள். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். வருமான உயர்வுக்கான சாத்தியக்கூறுகள் அதிகம். கடின உழைப்பிற்கு ஏற்ற இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

45
மிதுனம்: ஜாக்பாட் அடிக்கும் யோகம்
Image Credit : Asianet News

மிதுனம்: ஜாக்பாட் அடிக்கும் யோகம்

மிதுன ராசியின் 12-வது வீட்டில் சூரியன், புதன் சேர்க்கை நிகழ்வதால், எதிர்பாராத பண வரவு உங்களை ஆச்சரியப்படுத்தும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் கௌரவமான வேலை அமையும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் லாபம் ஈட்ட நல்ல வாய்ப்புகள் அமையும். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.

55
கன்னி: அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்
Image Credit : Asianet News

கன்னி: அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்

கன்னி ராசியின் 9-வது வீடான பாக்கிய ஸ்தானத்தில் இந்த புதாதித்ய ராஜயோகம் அமைவதால், முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் எடுக்கும். வியாபாரிகளுக்கு இந்த காலம் ஒரு 'கோல்டன் பீரியட்'. புதிய கிளைகளைத் தொடங்கும் யோகம் உண்டு. உங்கள் பேச்சுத் திறமையால் கடினமான காரியங்களையும் சுலபமாக முடிப்பீர்கள். நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று செய்யும் முதலீடுகள் பெரும் லாபத்தை ஈட்டித் தரும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராசி பலன்
ஜோதிடம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vish Yoga : ரிவர்ஸ் ஆட்டம் ஆடும் சனி பகவான்... விஷ யோகத்தால் சிக்கலில் சிக்கும் 5 ராசிகள் என்னென்ன?
Recommended image2
Guru Peyarchi : அக்டோபர் 31 முதல் மாறப்போகும் குரு பகவான்! 12 ராசிகளுக்கும் என்னென்ன பலன்கள்?
Recommended image3
Ketu Nakshatra Transit: கேது நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மேல் சோதனை.. கவனம் தேவை
Related Stories
Recommended image1
Sani Peyarchi: சனியின் பிடியில் இருந்து விடுதலை.. மே 17 முதல் ராஜயோகம் ஆரம்பம்.. குபேர யோகத்தில் நனையப்போகும் மூன்று ராசிகள்!
Recommended image2
Money Zodiac: குபேர யோகம்.. செல்வந்தராக வாழப்போகும் அந்த 4 அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved