MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • புதன் பெயர்ச்சி பலன் 2024: சிம்ம ராசிக்கு இடம் மாறும் புதன்; ஷேர் மார்க்கெட்டில் ஜாக்பாட் யாருக்கு?

புதன் பெயர்ச்சி பலன் 2024: சிம்ம ராசிக்கு இடம் மாறும் புதன்; ஷேர் மார்க்கெட்டில் ஜாக்பாட் யாருக்கு?

புத்திக்கு அதிபதியான புதன் பகவான் நாளை (19 ஜூலை) முதல் சிம்ம ராசியில் பயணம் செய்யப்போகிறார். சூரியனின் வீட்டில் குடியேறப்போகும் புதனால் எந்த ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது கோடீஸ்வர யோகம் யாருக்கு தேடி வரும் என்று பார்க்கலாம்.

2 Min read
Web Team
Published : Jul 18 2024, 04:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Who is puthan bhagavan

Who is puthan bhagavan

மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருக்கும் இவர், அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குவதால்தான் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். புதன் நரம்பின் நாயகன். இவர் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும்.
 

28
Mesham

Mesham

ஐந்தாவது வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் படைப்பாற்றல் திறன் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். பங்குச்சந்தை முதலீட்டில் லாபம் கொட்டப்போகிறது. உங்கள் எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு இது சிறந்த நேரமாகும். எந்த காரணத்திற்காகவும் கடன் வாங்குவதை தவிர்த்து விடுவது நல்லது.
 

38
Mithunam Rasi

Mithunam Rasi

புதன் பகவான் உங்களுடைய ராசிக்கு மூன்றாவது வீட்டில் பயணம் செய்வதால் உங்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அதிக அளவில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.
 

48
Simmam Rasi

Simmam Rasi

சூரிய பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்குள் நாளை முதல் புதன் குடியேறப்போகிறார். மாணவர்களுக்கு உங்கள் லட்சியங்கள் நிறைவேறப்போகிறது. உயர்கல்வி தொடர்பான முயற்சிகளை வெற்றியைத் தரும். கலைத்துறையில் இருப்பவர்களின் படைப்பாற்றல் திறன் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். உங்களின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

58
Kanni Rasi

Kanni Rasi

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் ராசிநாதன் பயணம் செய்கிறார். பேச்சில் கவனமும் நிதானமும் தேவை.  தொழில் வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு இது ஏற்ற காலகட்டமல்ல. புதிய முதலீடுகளைத் தவிர்த்து விடுவது நல்லது.  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவ செலவுகள் வர வாய்ப்பு உள்ளது.

68
Thulam Rasi

Thulam Rasi

புதன் பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும்.  நெருங்கிய நண்பர்கள் உறவினர்களின் உதவி வீடு தேடி வருவார்கள். உங்கள் விருப்பங்கள் எளிதில் நிறைவேறும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும்.  புதன்கிழமைகளில் விஷ்ணு பகவான் ஆலயத்திற்கு சென்று துளசி மாலை சாற்றி வணங்குவது நல்லது.

78
dhanush rasi

dhanush rasi

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான 9 வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வழியில் பணம் வரும்.

88
kumbam rasi

kumbam rasi

புதன் பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்கிறார். புதனின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம்.  கூட்டுத்தொழிலில் பங்குதாரா்களிடம் எச்சாிக்கையாக இருக்கவும். பணப்பிரச்னை நீங்கி பொருளாதார வளம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் கவனமும் நிதானமும் தேவை.

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved