- Home
- Astrology
- முன்னோர்கள் கண்டிராத அதிசயம்.! 100 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் ராஜயோகம்.! அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிகள்!
முன்னோர்கள் கண்டிராத அதிசயம்.! 100 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் ராஜயோகம்.! அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிகள்!
Budhaditya Rajyog 2026: 100 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. மகர சங்கராந்தி அன்று இந்த ராஜயோகம் உருவாவது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தர உள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.

Budhaditya Rajyog 2026
ஜோதிடத்தில் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றமானது மனிதர்களின் வாழ்க்கையில் எதிரொலிக்கிறது. கிரகங்கள் பிற கிரகங்களுடன் இணைந்து ராஜயோகங்களை உருவாக்குகின்றன. குறிப்பாக பண்டிகை தினங்களில் உருவாகும் ராஜயோகங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி 14-ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு சூரிய பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அந்த தினம் மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 17ஆம் தேதி புதன் பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மகர ராசியில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் சக்தி வாய்ந்த புதாதித்ய ராஜயோகம் உருவாக இருக்கிறது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு பின்னர் மகர சங்கராந்தி தினத்தில் இந்த ராஜயோகம் உருவாவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறஉள்ளனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம்
இந்த ராஜயோகமானது கும்ப ராசியின் லாப ஸ்தானத்தில் நிகழ இருக்கிறது. இதன் காரணமாக கும்ப ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு, பொருளாதாரத்தில் முன்னேற்றம், வருமானத்திற்கான புதிய வழிகள் ஆகியவை திறக்கப்படும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். அதிகரிக்கும் பண வரவால் தங்கம், வெள்ளி போன்ற நல்ல திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். சிலருக்கு நிலம், மனை வாங்கும் யோகம் கிடைக்கும். குடும்ப உறவுகளில் இருந்த தகராறுகள் தீர்க்கப்படும். வெளிநாடு திட்டங்களால் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி கிடைக்கும். தொழிலில் இருந்து எதிர்பாராத லாபம் உண்டாகும்.
மேஷம்
மேஷ ராசியின் அதிர்ஷ்ட வீட்டில் சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாக இருக்கிறது. இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தொடர்பாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். அலுவலகம் மூலமாக வெளிநாடு செல்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை குடும்ப உறவுகள் இனிமையாக மாறும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் பேசி தீர்க்கப்படும். கடன் பிரச்சனைகள் குறையும். பணவரவு ஏற்படுமவாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீடு அல்லது ஒத்திக்கு மாறும் யோகம் உண்டாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதாதித்ய ராஜயோகம் சுப பலன்களை தர உள்ளது. தன ஸ்தானமான நான்காம் வீட்டில் இந்த யோகம் உருவாகிறது. கன்னி ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பொன், பொருள், இன்பங்களை அனுபவிப்பீர்கள். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை நிகழும். வீட்டில் தங்க ஆபரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும். தொழிலில் இருப்பவர்களுக்கு அதன் மூலம் லாபம் கிடைக்கும். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் மற்றும் தந்தை வழி உறவுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். தாயார் வழியில் இருந்து பூர்வீக சொத்துக்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

