MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • மார்ச் 21 கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்த புதன் பகவான்.! இந்த ராசிகள் இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வரப்போகுது.!

மார்ச் 21 கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்த புதன் பகவான்.! இந்த ராசிகள் இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வரப்போகுது.!

Budh Vakri Nivarthi Palangal : மார்ச் 21, 2026 கும்ப ராசியில் புதன் பகவான் வக்ர நிவர்த்தி பெறுகிறார். இதன் காரணமாக பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 21 2026, 11:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Budh Vakri Nivarthi 2026 Palangal
Image Credit : AI Generated

Budh Vakri Nivarthi 2026 Palangal

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களின் அசைவும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கிரகங்கள் முன்னோக்கி மட்டுமல்லாமல் பின்னோக்கிய நிலையிலும் நகர்கின்றன. இது ‘வக்ர நிலை’ என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக அறியப்படும் புதன் பகவான், பிப்ரவரி 26 தொடங்கி கும்ப ராசியில் வக்ர கதியில் பயணித்து வருகிறார். 23 நாட்கள் வக்கிர நிலையில் இருந்த அவர், மார்ச் 21, 2026 வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இங்கு காணலாம்.

26
மேஷம்
Image Credit : AI Generated

மேஷம்

மேஷ ராசியின் 11 ஆம் வீட்டில் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். மேலும் கும்ப ராசியில் ஏற்கனவே சஞ்சரித்து வரும் செவ்வாய் மற்றும் ராகு உடன் சிறப்பு தொடர்பும் ஏற்படுகிறது. எனவே மேஷ ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் கடின உழைப்புக்கான பலன்களைப் பெறுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாகும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் நேர்மறையான பலன்களைக் கொண்டு வரும். முதலீடு சார்ந்த விஷயங்களில் லாபம் பெறுவீர்கள். சகோதரருடன் ஏற்பட்ட மன ஸ்தாபங்கள் முடிவுக்கு வரும். குடும்பப் பிரச்சனைகள் சரியாகும். பொருளாதார ரீதியாக பலப்படுவீர்கள்.

Related Articles

Related image1
Guru Peyarchi 2026 : 12 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச வீட்டில் குரு பெயர்ச்சி.! இந்த ராசிகளுக்கு மகா ராஜயோகம்.! வாழ்வில் ஜொலிக்கப் போறீங்க.!
Related image2
மார்ச் 21 உருவாகும் 6 யோகங்கள்.! இன்று அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யார்? Mesham to Meenam Today Rasi Palan
36
ரிஷபம்
Image Credit : AI Generated

ரிஷபம்

ரிஷப ராசியின் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன் காரணமாக தொழிலில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். புதிய நிதி ஆதாயங்கள் உண்டாகும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். முதலீடுகள் செய்திருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். விருப்பமான பொருட்களை வாங்குவீர்கள். உலோகம் சார்ந்த பணிகளை செய்பவர்கள் நல்ல லாபத்தைக் காணலாம். நிலம் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

46
மிதுனம்
Image Credit : AI Generated

மிதுனம்

மிதுன ராசியின் ஒன்பதாவது வீட்டில் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். இது அதிர்ஷ்ட ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் நீங்கள் பல துறைகளிலும் வெற்றியைப் பெறுவீர்கள். விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் சாதனைகளைப் புரிவீர்கள். மிதுன ராசியின் அதிபதியான புதன் பகவான் புதிய தொழில் ஒப்பந்தங்களை கொண்டு வருவார். சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். உங்கள் தனித்திறமைகள் வெளிப்படும். உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

56
கும்பம்
Image Credit : AI Generated

கும்பம்

கும்ப ராசியின் லக்ன ஸ்தானத்தில் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். பேச்சு, அறிவு, படிப்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரகரான புதன் பகவான் கும்ப ராசிக்காரர்களின் மனதில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தீர்வை வழங்குவார். எதிர்காலம் தொடர்பாக தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப உறவுகள் இனிமையானதாக அமையும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். குடும்ப உறவுகளைப் பிரிந்து வெளிநாட்டில் வேலை பார்த்து வருபவர்கள் மீண்டும் தாய்நாடு திரும்புவீர்கள். சொந்த நாட்டில் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாகும். குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்புகள் வரலாம்.

66
மீனம்
Image Credit : AI Generated

மீனம்

மீன ராசியில் பிறந்தவர்களின் 12 ஆம் வீட்டில் புதன் பகவான் வக்ர நிவர்த்தி பெறுகிறார். இதன் காரணமாக முன்னேற்றம், வெற்றி ஆகியவை கிடைக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். புதிய வருமானத்திற்கான கதவுகள் திறக்கப்படும். உங்கள் கடின உழைப்புகள் அங்கீகரிக்கப்படும். திறமைகளை வெளிப்படுத்தி புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சிறிய அளவில் தொழில் செய்து வருபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வீகள். சிறு, சிறு கடன் பிரச்சனைகளை முடித்து மன நிம்மதி பெறுவீர்கள். பண விஷயத்தில் சாதகமான சூழல் ஏற்படும். இருப்பினும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
மார்ச் 21 உருவாகும் 6 யோகங்கள்.! இன்று அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யார்? Mesham to Meenam Today Rasi Palan
Recommended image2
மார்ச் 21-ல் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் புதன்.! இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்.! தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறீங்க.!
Recommended image3
மிதுன ராசியில் கஜகேசரி ராஜயோகம்.! இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் மேல் அதிர்ஷ்டம் கொட்டப்போகுது.!
Related Stories
Recommended image1
Guru Peyarchi 2026 : 12 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச வீட்டில் குரு பெயர்ச்சி.! இந்த ராசிகளுக்கு மகா ராஜயோகம்.! வாழ்வில் ஜொலிக்கப் போறீங்க.!
Recommended image2
மார்ச் 21 உருவாகும் 6 யோகங்கள்.! இன்று அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யார்? Mesham to Meenam Today Rasi Palan
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved