MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: ஒரு வருடத்திற்குப் பிறகு துலாம் ராசியில் சந்திக்கும் நண்பர்கள்.!கோடீஸ்வரனாக மாறப்போகும் 3 ராசிகள்.!

Astrology: ஒரு வருடத்திற்குப் பிறகு துலாம் ராசியில் சந்திக்கும் நண்பர்கள்.!கோடீஸ்வரனாக மாறப்போகும் 3 ராசிகள்.!

Budh Shukra Conjunction 2025: நவம்பர் 23, 2025 துலாம் ராசியில் சுக்கிரன் மற்றும் புதனின் சிறப்பு சேர்க்கை நடைபெற உள்ளது. இது சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Nov 23 2025, 11:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
லட்சுமி நாராயண யோகம் 2025
Image Credit : Asianet News

லட்சுமி நாராயண யோகம் 2025

வேத ஜோதிடத்தின்படி ஒன்பது கிரகங்களும் அவ்வப்போது பெயர்ச்சியாகி சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. இந்த யோகத்தின் விளைவுகள் மனித வாழ்க்கையில் எதிரொலிக்கின்றன. பஞ்சாங்கத்தின்படி நவம்பர் 23 ஆம் தேதி துலாம் ராசியில் புதன் மற்றும் சுக்கிரனின் சிறப்பு சேர்க்கை நடைபெற உள்ளது. இது லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்க இருக்கிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும். புதிய வேலை வாய்ப்புகளுடன், நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகளும் உருவாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

  • சுக்கிரன் மற்றும் புதனின் சேர்க்கை துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த சேர்க்கை உங்கள் ராசியின் லக்ன வீட்டில் உருவாகிறது. 
  • இந்த நேரத்தில் உங்கள் ஆளுமைத் திறன் மேம்படும். தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். குழப்பமான முடிவுகளில் இருந்து விடுபட்டு துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். 
  • வணிகம் மற்றும் வேலைவாய்ப்பில் லாபம் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பு புதிய வருமானத்திற்கான கதவுகளை திறக்கும். மாணவர்கள் முன்பை விட படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். 
  • போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 
  • புதிய வீடு, மனை மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.

Related Articles

Related image1
Astrology: இந்த 4 ராசிகளில் பிறந்த பெண்களை யாராலும் ஏமாற்ற முடியாது.! எப்பவும் ரொம்ப உஷாரா இருப்பாங்க.!
Related image2
Astrology: 500 ஆண்டுகளுக்குப் பின் ஒரே நேரத்தில் வக்ர நிவர்த்தி அடையும் சனி-புதன்.! கோடிகளை குவிக்கப் போகும் ராசிகள்.!
34
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

  • கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் புதன் சேர்க்கை பல வழிகளில் நன்மை பயக்கும். இந்த சேர்க்கை உங்கள் ராசியின் நான்காவது வீட்டில் நிகழ இருக்கிறது. 
  • எனவே இந்த காலக்கட்டத்தில் நீங்கள் வசதிகளையும், ஆடம்பரங்களையும் அனுபவிப்பீர்கள். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்த சூழல் உருவாகும். 
  • நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். 
  • மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும். தொழிலில் புதிய யோசனைகளை செயல்படுத்தி லாபத்தை ஈட்டுவீர்கள். மாமனார் மற்றும் மாமியார் வழி உடனான உறவு மேம்படும்.
44
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

  • மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் புதன் இணைவு பத்தாம் வீடான கர்ம ஸ்தானத்தில் நடைபெறுகிறது. எனவே அவர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். 
  • தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் புதிய உச்சங்களையும் தொடுவீர்கள். வேலை செய்பவர்கள் புதிய வாய்ப்புகளை கண்டுபிடித்து வேலை மாறுதல் பெறுவீர்கள். 
  • வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். லாபத்திற்கான வழிகள் திறக்கப்படும். 
  • வணிகர்கள் குறிப்பிடத்தக்க நிதி ஆதாயங்களை அனுபவிப்பீர்கள். வணிகத்தை விரிவு செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பின்னோக்கி நகரத் தொடங்கிய புதன் பகவான்.! இந்த ராசிகளுக்கு வேலை போகலாம்.! தொழிலில் பலத்த அடி விழப்போகுது.!
Recommended image2
ஒரே நேர்க்கோட்டில் வரும் 5 கிரகங்கள்.! 4 ராசிகள் அடுத்தடுத்து சிக்கல்களை சந்திக்கப்போறீங்க.!
Recommended image3
இந்த 4 ராசிக்காரர்கள் விரைவில் செல்வந்தர்கள்!.. பாபா வாங்கா கணிப்பு!.. உங்கள் ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
Astrology: இந்த 4 ராசிகளில் பிறந்த பெண்களை யாராலும் ஏமாற்ற முடியாது.! எப்பவும் ரொம்ப உஷாரா இருப்பாங்க.!
Recommended image2
Astrology: 500 ஆண்டுகளுக்குப் பின் ஒரே நேரத்தில் வக்ர நிவர்த்தி அடையும் சனி-புதன்.! கோடிகளை குவிக்கப் போகும் ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved