- Home
- Astrology
- சந்திர - சூரிய கிரகணத்தில் பிறந்தால் இவ்ளோ சக்தியா.?! புகழ், அதிகாரம், பணபலத்திற்கு அதிபதிகள் இவர்கள்.!
சந்திர - சூரிய கிரகணத்தில் பிறந்தால் இவ்ளோ சக்தியா.?! புகழ், அதிகாரம், பணபலத்திற்கு அதிபதிகள் இவர்கள்.!
கிரகண நேரத்தில் பிறந்தவர்கள் சாதாரண மனிதர்களை விட வித்தியாசமான சக்திகளைக் கொண்டிருப்பார்கள். சந்திர கிரகணத்தில் பிறந்தவர்கள் மக்களைக் கவரும் திறனும், சூரிய கிரகணத்தில் பிறந்தவர்கள் அதிகார பலமும் பெற்றிருப்பார்கள்.

கிரகணம் எனும் அதிசய நாள்.!
கிரகணம் என்ற சொல் நம்மில் பலரையும் பயமுறுத்தும் நிலையிலேயே உள்ளது. ஆனால் அதன் சிறப்பகளை பற்றி அறிந்தால் அந்த நாளை நீங்கள் கொண்டாடுவீர்கள். ஜோதிட சாஸ்திரத்தில் சந்திர சூரிய கிரகணம் மிக வலிமையான காலமாக கருதப்படுகிறது. அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் சாதாரணமாக இல்லாமல், வித்தியாசமான சக்திகளை பெற்று பிறப்பார்கள் என்று பல ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. இவர்களின் மன உறுதி, தீவிர சிந்தனை, புதுமையான யோசனைகள், முடிவெடுக்கும் திறன் எல்லாம் மற்றவர்களைவிட மிகுந்தது. கிரகணத்தின் சக்தி இவர்களுக்கு புகழ், அதிகாரம், பணவளம் ஆகியவற்றை கிட்டத்தட்ட இயற்கையாகவே இழுத்துக் கொடுத்து விடுகிறது.
வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும்.!
சந்திர கிரகணம் நேரத்தில் பிறந்தவர்கள் உணர்ச்சி மற்றும் சிந்தனைகளில் வலிமையானவர்கள். மக்களை கவரும் திறன் அவர்களிடம் அதிகமாக இருக்கும். பேசும் திறன் மற்றும் சிந்தனையால் மக்களை கவர்ந்து தலைவராக உயர்ந்து விடுவார்கள் என்கிறது ஜோதிடம். இவர்களின் வாழ்வில் சில சவால்கள் இருந்தாலும், அதை வென்று எழும் போது ஆச்சரியமான வெற்றிகளை பெற்றுவிடுவார்கள்.
சூரிய கிரகணம் தரும் அட்டகாசமான வாழ்ககை
அதேபோல் சூரிய கிரகணத்தில் பிறந்தவர்கள் அதிகாரம், ஆட்சி, பெரிய பதவி போன்றவற்றில் வெற்றி பெறுவார்கள். இவர்களிடம் இருக்கும் ஈர்ப்பு சக்தி, துணிச்சல், தீர்மானம், ஒழுங்கு போன்ற குணங்கள் அவர்களை எங்கே சென்றாலும் பிரத்தியேகமாகத் தெரிய வைக்கும். வாழ்க்கையின் ஆரம்பத்தில் சிரமங்கள் இருந்தாலும் நடுப்பகுதியிலிருந்து செல்வமும் புகழும் பெருகும். தலைவன், படைதலைவன், எஜமான், ஜில்லா கலெக்டர், ஆட்சியர், முதலமைச்சர் என எல்லாமும் இவர்களுக்கு கீழே வரும் என்றால் அவர்களின் அதிகார பலம் அதைவிட அதிகமாக இருக்கம்.
தங்க தலைவன் பிறந்தான்
அதே சமயம் குறிப்பிட்ட ராசிகளுக்கு கிரகணப் பிறப்பு மிகுந்த சக்தியையும் ராஜ வாழ்க்கையையும் தரும் என்று சொல்லப்படுகிறது. சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளில் கிரகணப் பிறப்பு கிடைத்தால் அவர்கள் சமூகத்தில் ஒரு தலைவராக, கலைஞராக, அரசியல் தலைவராக, அல்லது பெரிய தொழிலதிபராக உயர்வது நிச்சயம். இவர்களின் சொல் எடுக்கும், செயல் வெற்றி பெறும், பாராட்டு எளிதில் வரும்.
ஆன்மிக வழியில் சென்றால் வெற்றி, சந்தோஷம் உறுதி
கிரகணப் பிறந்தவர்கள் தவறாமல் ஆன்மிகம், தியானம், தெய்வ வழிபாடு செய்து சக்தியை நல்ல திசையில் செலுத்த வேண்டும். கிரகணப் பிறந்தவர்கள் சாதாரணமாக பிறந்தவர்கள் அல்ல. அவர்களுக்குள் ஒரு ராஜ யோகம் மறைந்து கிடக்கிறது. சரியான உழைப்பு, தெய்வ விசுவாசம் மற்றும் நம்பிக்கையுடன் வாழ்ந்தால் புகழும், அதிகாரமும், பணமும் அவர்களைத் தேடி வந்து சேரும்.