- Home
- Astrology
- Birth Month: இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் கணவரை அடக்கி ஆள்வார்களாம்.! கடைசி வரை அடிமையாகவே இருக்க வேண்டியதுதான்.!
Birth Month: இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் கணவரை அடக்கி ஆள்வார்களாம்.! கடைசி வரை அடிமையாகவே இருக்க வேண்டியதுதான்.!
சில மாதங்களில் பிறந்த பெண்கள் தங்கள் காதலர்கள் அல்லது கணவர்களிடம் அதிக ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருப்பார்களாம். அந்த மாதங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கணவரை அடக்கி ஆளும் பெண்கள்
ஜோதிடத்தின் படி ஒருவரின் பிறந்த மாதமானது அவர்களின் ஆளுமை, பழக்க வழக்கங்கள் மற்றும் உறவுகளில் அவர்கள் வெளிப்படுத்தும் குணங்களை பாதிக்கிறது. குறிப்பாக காதல் அல்லது குடும்ப உறவுகளில் சில பெண்கள் அதிக தன்னம்பிக்கை, தலைமை பண்பு மற்றும் முடிவெடுக்கும் திறனால் ஆதிக்கம் மிக்கவர்களாக தோன்றுகின்றனர். இந்த பெண்கள் தங்களது காதலர்கள் அல்லது கணவர்களிடம் அதிக ஆதிக்கம் செலுத்தும் பெண்களாக அறியப்படுகின்றனர். தங்கள் மனதில் பட்டதை பேசும் தைரியத்துடனும், மன உறுதியுடனும் விளங்குகின்றனர். எந்தெந்த மாதத்தில் பிறந்த பெண்கள் உறவுகளில் அதிக ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருப்பார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜனவரி
ஜனவரி மாதத்தில் பிறந்த பெண்கள் தைரியமானவர்களாகவும், தெளிவான இலக்குகளை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் காதல் உறவுகள் ஆனாலும் சரி, திருமண உறவுகள் ஆனாலும் சரி தங்கள் கருத்துக்களில் உறுதியாக இருப்பார்கள். இவர்களின் தன்னம்பிக்கையும், முடிவெடுக்கும் திறனும் இவர்களை இயல்பாகவே ஆதிக்கம் மிக்கவர்களாக மாற்றுகிறது. எந்த முடிவானாலும் அவர்களே எடுக்க விரும்புவார்கள். நீங்களும் அவர்கள் வழியை பின்பற்றி நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதில் ஏதேனும் சிறு தவறு நடந்தால் கூட கோபம் கொள்வார்கள். இருப்பினும் அவர்களின் இலக்குகள் மற்றும் லட்சியங்களை நீங்கள் ஆதரிப்பீர்களேயானால் உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அவர்கள் விளங்குவார்கள்.
மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் உணர்ச்சிபூர்வமானவர்களும், அதே நேரத்தில் உறுதியான மனநிலை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தங்கள் துணையிடம் உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்து, உறவுகளை வழி நடத்துவதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். இவர்களின் இயல்பான குணங்கள் மற்றும் தங்கள் கருத்துக்களை முன்வைக்கும் திறன் அவர்களை ஆதிக்க மிக்கவர்களாக மாற்றுகிறது. மேலும் மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் சவாலை எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள். மனதில் பட்டதை பேசும் நேர்மையான குணத்தையும் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இவர்களின் மன உறுதி, அதிகாரம் செலுத்துவது போல தோன்றினாலும் பாசத்திற்கு எந்த குறையும் இவர்கள் வைப்பதில்லை.
ஜூலை
ஜூலை மாதத்தில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே ஒரு அரசியல் போன்ற ஆளுமை கொண்டவர்கள் பிறர் தங்களை ராணி மாதிரி நடத்த வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் இதன் காரணமாக அவர்கள் பிறரை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கின்றனர் மேலும் அவர்கள் பேச்சுத் திறமையால் பிறரை எளிதில் ஆதிக்கம் செலுத்துவார்கள் அவர்கள் காட்டும் வலியை தான் பிறர் பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் தங்கள் முடிவுகளை உறுதியாக முல்லைப்பார்கள் அமைதியான குணம் கொண்டிருந்தாலும் உறுதியான அணுகுமுறை அவர்களை ஆதிக்கம் மிக்கவர்களாக மாற்றுகிறது.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பெண்கள் புயல் போல ஆளுமை கொண்டவர்களாக திகழ்வார்கள். இவர்கள் உறவுகளில் தலைமைப் பண்புகளை வெளிப்படுத்தவே விரும்புகின்றனர். இவர்களின் தன்னம்பிக்கையும், எதையும் சாதிக்கும் மனப்பான்மையும் உறவில் ஆதிக்கம் செலுத்த உதவுகிறது. இவர்கள் தங்கள் பேச்சை பிறர் கேட்க வேண்டும் என்கிற வைராக்கியம் கொண்டிருப்பர். அது காதலரானாலும் சரி, கணவரானாலும் சரி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவே விரும்புகின்றனர். தங்களின் தன்னம்பிக்கை மற்றும் ஆளுமையால் எந்த உறவானாலும் அதில் அதிகாரம் செலுத்தவே அவர்கள் விரும்புகின்றனர்.
நவம்பர்
நவம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் அதிக ஆர்வம் கொண்டவர்கள். மேலும் இவர்கள் தீவிரமானவர்கள். இவர்களின் ஆர்வம் சில சமயங்களில் எல்லையை மீறி செல்லலாம். இதன் காரணமாக இவர்கள் ஆதிக்கம் செலுத்தும் மனைவியாக அல்லது காதலிகளாக மாறலாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் உங்கள் உள்ள கிடங்கையும் மிக ஆழமாக ஆராய்வார்கள். அவர்களின் அதிகாரப் போக்கும், பிடிவாத குணமும் உறவுகளில் பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம். ஆனால் அதே சமயம் அவர்களின் விசுவாசத்தை சந்தேகப்படவே முடியாது. அவர்கள் ஒருபோதும் தங்கள் துணையை விட்டு செல்வதற்கோ அல்லது விட்டுக் கொடுப்பதற்கோ விரும்புவதில்லை.