- Home
- Astrology
- October Born Personality : அக்டோபர் மாதம் பிறந்தவங்க ப்ளேபாயா இருப்பாங்களா? அவங்க குணங்கள் பத்தி முழுவிவரங்கள்
October Born Personality : அக்டோபர் மாதம் பிறந்தவங்க ப்ளேபாயா இருப்பாங்களா? அவங்க குணங்கள் பத்தி முழுவிவரங்கள்
அக்டோபர் மாதம் பிறந்த நபர்களின் குணநலன்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

October Born Personality
ஆண்டின் 10வது மாதமான அக்டோபரில் பிறந்தவர்களுக்கு சில தனித்துவமான பண்புகள் இருக்கும். அதுதான் அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. உங்களுக்கு தெரியுமா? உலகமே இன்றுவரை நினைவில் வைத்திருக்கும் மகாத்மா காந்தி, பில் கேட்ஸ் ஆகியோரும் அக்டோபரில் பிறந்தவர்கள் தான்.
எந்த பகவான் அம்சம்?
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் கிருஷ்ண பகவானின் அம்சம் பொருந்தியவர்கள். இவர்களிடம் அன்புக்கும், காதலுக்கும் பஞ்சம் இருக்காது. பெண்கள் இவர்களை சுற்றி வருவார்கள். காதல் லீலைகள் இவர்களுக்கு இயல்பாக வரும். அமைதியாகவும் அதே சமயம் கூலாகவும் இருந்தால் அவர்கள் அக்டோபரில் பிறந்தவர்கள் எனச் சொல்லிவிடலாம்.
சவாலை சமாளிப்பார்கள்
அக்டோபர் மாதம் பிறந்தவர்களுக்கு எந்த சவாலையும் எதிர்கொள்ளும் திறனுள்ளது. இவர்கள் எப்போதும் கனிவாக நடந்துகொள்வார்கள். மிகப்பெரிய துயர் கூட அவர்களைச் சோர்வடையச் செய்யாது. தங்களுடைய ஆளுமையால் தங்களை சுற்றியிருப்பவர்களையும் உற்சாகப்படுத்தும் குணம் கொண்டவர்கள்.
ரொமாண்டிக்
அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் ரொமாண்டிக்கானவர்கள். இயற்கையாகவே காதல் உணர்வு உள்ளவர்கள். காதலுக்கு மரியாதை கொடுப்பவர்கள். அதனால் இவர்கள் மீது பெண்களுக்கு ஈர்ப்பு வருவதும் இயல்பு. பல பெண்கள் இவர்கள் மீது மையல் கொள்வார்கள். கிருஷ்ணன் அம்சம் என்றால் சும்மாவா?
மன உறுதி
அக்டோபர் மாதம் பிறந்தவர்களுக்கு மன உறுதி அதிகம். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் உத்வேகம், அதை செய்யாமல் விடக் கூடாது என்ற உறுதியோடு இருப்பார்கள். இதுவே இவர்களை தனித்துக் காட்டுகிறது.
நேர்மை
அக்டோபரில் பிறந்தவர்களுக்கு பொய் சொல்வது பிடிக்காது. நேர்மையாக இருக்க நினைப்பார்கள். உங்கள் நண்பர் அக்டோபரில் பிறந்தவர் என்றால் அவர்களிடம் பொய் சொல்லாதீர்கள். மகாத்மா காந்தி மாதிரி உண்மையை பேச நினைப்பார்கள். பொய்யை பொறுக்கமாட்டார்கள். துன்பப்பட்டாலும் நேர்மையாக இருக்க நினைப்பார்கள்.
படைப்பாற்றல்
அக்டோபரில் பிறந்தவர்களுக்கு படைப்பாற்றல் அதிகம். அவர்கள் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டால் நல்ல எதிர்காலம் உண்டு. அக்டோபரில் பிறந்த குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர் நன்கு கவனித்தால் அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை கண்டறியலாம். அதை ஊக்குவித்தால் பின்னாளில் பல சாதனைகள் செய்வார்கள்.