MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: இந்த 3 ராசிக்காரர்கள் வெள்ளி மோதிரம் அணியக்கூடாது! ஜோதிடம் சொல்லும் அதிர்ச்சி காரணம்!

Astrology: இந்த 3 ராசிக்காரர்கள் வெள்ளி மோதிரம் அணியக்கூடாது! ஜோதிடம் சொல்லும் அதிர்ச்சி காரணம்!

Astrology 3 Zodiac Signs Who Should Not Wear Silver Rings: 3 ராசிக்காரர்கள் வெள்ளி மோதிரம் அணியக்கூடாது என ஜோதிடசாஸ்திரம் சொல்கிறது. இதற்கு எனன் காரணம்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : May 14 2026, 04:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்த 3 ராசிக்காரர்கள் வெள்ளி மோதிரம் அணிந்தால் ஆபத்தா?
Image Credit : AI

இந்த 3 ராசிக்காரர்கள் வெள்ளி மோதிரம் அணிந்தால் ஆபத்தா?

ஜோதிட சாஸ்திரத்திங்களின்படி நவகிரகங்களும் உலோகங்களும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை ஆகும். ஒவ்வொரு உலோகமும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. அந்த வகையில், வெள்ளி (Silver) சுக்கிரன் மற்றும் சந்திரனின் ஆதிக்கத்தைப் பெற்ற உலோகமாக ஜோதிட அடிப்படையில் பார்க்கப்படுகிறது.

வெள்ளி அணிவது பொதுவாக மன அமைதியையும், உடல் குளிர்ச்சியையும் தரும் என்றாலும், ஜோதிட ரீதியாக ஒருசில ராசிக்காரர்கள் வெள்ளி மோதிரமோ அல்லது சங்கிலியோ அணிவதைத் தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது. ஜோதிட வல்லுநர்களின் கருத்துப்படி மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் வெள்ளியை தவிர்க்க வேண்டும் என கூறுகிறார்கள். அவை ஏன்? என அதற்கான விளக்கத்துடன் இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாய் நெருப்பு தத்துவத்தைக் கொண்டவர். குளிர்ச்சியான தன்மையைக் கொண்ட வெள்ளியை மேஷ ராசிக்காரர்கள் அணியும்போது, அது அவர்களின் ஆளுமையில் மந்தநிலையை ஏற்படுத்தக்கூடும் அல்லது முடிவெடுப்பதில் குழப்பத்தை உண்டாக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனால் இவர்கள் வெள்ளியை தவிர்க்கும்படி ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

Related Articles

Related image1
Astrology: இந்த 4 ராசி பெண்கள் அதி புத்திசாலிகள்! காதலில் இவர்களை ஏமாற்றவே முடியாது! உங்க ராசி இருக்கா?
Related image2
Astrology: எப்போதும் அன்பாக இருக்கும் 3 ராசி பெண்கள்.! என்ன செய்தாலும் கோவமே வராதாம் இவர்களுக்கு.!
35
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு தங்கம் மிகவும் உகந்தது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் (வெள்ளி) உள்ள பகை அல்லது சமநிலைத் தன்மையால், வெள்ளி அணிவது இவர்களுக்குச் சில நேரங்களில் தேவையற்ற மன அழுத்தத்தையோ அல்லது உடல்நலக் குறைபாடுகளையோ ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

45
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

குரு பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசியினருக்குப் பொன் (தங்கம்) அணிவதே சிறந்தது. இவர்கள் வெள்ளி அணியும்போது அது இவர்களது அதிர்ஷ்டக் காரணியைத் தடுப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இவர்களும் வெள்ளியை தவிர்க்க வேண்டும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

55
இந்த ராசிக்காரர்கள் ஏன் வெள்ளியை தவிர்க்க வேண்டும்?
Image Credit : chandi100takka Instagram

இந்த ராசிக்காரர்கள் ஏன் வெள்ளியை தவிர்க்க வேண்டும்?

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசிக்கும் ஒரு தத்துவம் உண்டு. நீர் ராசிகள் என அழைக்கப்படும் கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவற்றுக்கு வெள்ளி மிகவும் நல்லது. ஆனால் நெருப்புத் தத்துவ ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு ஆகியவற்றுக்கு வெள்ளி எப்போதும் சாதகமாக இருப்பதில்லை. நெருப்பு ராசிக்காரர்கள் இயல்பாகவே சுறுசுறுப்பானவர்கள். குளிர்ச்சி தரும் வெள்ளி அவர்களின் வேகத்தைக் குறைக்கலாம்.

சிலருக்கு வெள்ளி அணிந்த பிறகு தேவையற்ற செலவுகள் அதிகரிப்பதாக ஜோதிட ரீதியாக கணிக்கப்பட்டுள்ளது. சந்திரனின் ஆதிக்கம் அதிகம் உள்ள வெள்ளி, ஏற்கனவே உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவர்களுக்கு மன அலைச்சலைத் தரக்கூடும் என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் என்பது வெறும் அணிகலன் மட்டுமல்ல. அது ஒரு மனிதரின் குணநலன்களை, அவர்களின் ஏற்றத்தாழ்வுகளை தீர்மானிக்காது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Trigrahi Yoga 2026: 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே ராசியில் அமரும் 3 சுப கிரகங்கள்.! 4 ராசிகளுக்கு ராஜயோகம்.!
Recommended image2
Numerology: உங்களுக்கு Love Marriage-ஆ? Arranged Marriage-ஆ? உங்கள் பெயரின் முதல் எழுத்தை வச்சே கண்டுபிடிக்கலாம்.!
Recommended image3
Navpancham Yoga: ஜூன் 8 முதல் நவபஞ்சம யோகம்! உங்க ராசிக்கு ஜாக்பாட் அடிக்குமா? உடனே செக் பண்ணுங்க!
Related Stories
Recommended image1
Astrology: இந்த 4 ராசி பெண்கள் அதி புத்திசாலிகள்! காதலில் இவர்களை ஏமாற்றவே முடியாது! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Astrology: எப்போதும் அன்பாக இருக்கும் 3 ராசி பெண்கள்.! என்ன செய்தாலும் கோவமே வராதாம் இவர்களுக்கு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved