- Home
- Astrology
- Astrology: எந்த ராசிக்கு எந்த பரிசு கொடுக்கனும் தெரியுமா.?! உங்களை நேசிப்பவருக்கு ஏற்ற சரியான கிஃப்ட் இதுதான்.!
Astrology: எந்த ராசிக்கு எந்த பரிசு கொடுக்கனும் தெரியுமா.?! உங்களை நேசிப்பவருக்கு ஏற்ற சரியான கிஃப்ட் இதுதான்.!
ஒவ்வொரு ராசிக்காரரின் தனித்துவ குணாதிசயங்களைப் பொருத்து பரிசுகளைத் தேர்ந்தெடுப்பது மனதில் நிலையான மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அக்கினி, பூமி, காற்று, நீர் ராசிகளுக்கு ஏற்ற பரிசுகள் என்னென்ன என்பதை அறிந்து கொண்டு உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.

ராசிக்கேற்ப சரியான பரிசு என்ன? நட்சத்திரங்கள் சொல்வது இதுதான்!
நமக்கு புடிச்சவங்களுக்கு நாம் தேடி தேடி பார்த்து வாங்கும் பரிசு அவங்களுக்கு புடிச்ச மாதிரி இருக்கனும்தானே. அதனை சிறப்பா தேர்ந்தெடுத்து கொடுக்கும் போது கொடுப்பவர்களுக்கும் அதனை பெறுவர்களுக்கும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் பல மடங்கு அதிகரிக்கும். பரிசு கொடுப்பது என்பது வெறும் பொருளை பரிமாறுவது மட்டுமல்ல, அந்த பரிசு மூலம் உள்ளத்தில் உள்ள பாசம், அக்கறை, நினைவு ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு வழிமுறையாகும். ஆனால் பெரும்பாலும் எந்த பரிசு கொடுத்தால் பிடிக்கும்? என்ற குழப்பம் எல்லோருக்கும் வரும். அதற்கு ஒரு தனித்துவமான வழிகாட்டுதலாக ஜோதிடம் உதவுகிறது. ஒவ்வொரு ராசிக்காரரின் தனித்துவ குணாதிசயங்களைப் பொருத்து பரிசுகளைத் தேர்ந்தெடுத்தால் அந்த பரிசு மனதில் நிலையான மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
அக்கினி ராசிகள் (மேஷம், சிம்மம், தனுசு)
அக்கினி ராசிகளான மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ராசியினர் உற்சாகமும் சாகச உணர்வும் நிறைந்தவர்கள். சாமான்யமான பொருட்களை விட அனுபவத்தை தரும் பரிசுகளை விரும்புவார்கள். உதாரணமாக – டிராவல் பாஸ், அட்வென்ச்சர் ட்ரிப், ஜிம் மெம்பர்ஷிப் அல்லது சுவாரஸ்யமான கேம்கள். இவர்களுக்கு பரிசளிக்கும் போது ஆச்சரியத்தைத் தரும் வகையில் இருந்தால் அது அவர்களின் மனதை கவரும். இது போன்ற பரிசுகளை வழங்கி இந்த 3 ராசிகளையும் ஆச்சரியப்படுத்தலாம்.
பூமி ராசிகள் (ரிஷபம், கன்னி, மகரம்)
பூமி ராசிகள் எனப்படும் ரிஷபம், கன்னி மற்றும் மகரம் ராசியை சேர்ந்தவர்கள் நடைமுறை சிந்தனை கொண்டவர்கள். அவர்களுக்கு தரமான, நீடித்த மற்றும் வசதியான பொருட்களே பிடிக்கும். அழகிய வாட்ச், கம்பீரமான டைரி, ஹோம் டெகார் பொருட்கள், ஆர்கானிக் உணவுப் பொருட்கள் போன்றவை இவர்களின் விருப்ப பட்டியலில் இருக்கும். கம்பீரம் மற்றும் நம்பகத்தன்மை என்ற சொல்லே இவர்களின் பரிசு தேர்வை விவரிக்கும். எப்போதுமே பொருட்களின் மதிப்பை விட கொடுப்பவர்களை பொறுத்தே அதன் மகிழ்ச்சி அமையும் என்பது இந்த ராசியினரின் விருப்பமாக இருக்கும்.
காற்று ராசிகள் (மிதுனம், துலாம், கும்பம்)
காற்று ராசிகளான மிதுனம், துலாம் மற்றும் கும்பம் ராசியினருக்கு புத்தகங்கள், அறிவை வளர்க்கும் பொருட்கள், புதிய தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவற்றில் ஆர்வம் அதிகமாக இருக்கும். புதுமையை விரும்பும் இவர்களுக்கு இசை கருவிகள், பேஷன் பொருட்கள், ஆன்லைன் கற்கை நெறிகள் அல்லது கலை சார்ந்த பரிசுகள் மிகவும் பொருத்தமானவை. இவர்களின் கற்பனைக்கு வண்ணம் சேர்க்கும் பரிசுகளை கொடுத்தால் அவர்கள் மனம் மலர்ந்து போகும்.
நீர் ராசிகள் (கடகம், விருச்சிகம், மீனம்)
நீர் ராசிகளான கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசியினர் உணர்ச்சி மிக்கவர்கள். நினைவுகளைச் சுமக்கும் பரிசுகளே இவர்களை கவரும். புகைப்பட ஆல்பம், ஹேண்ட்மேட் கிஃப்ட்ஸ், ஆன்மீக பொருட்கள் அல்லது மெலோடிக் இசை சிடி போன்றவை இவர்களை மகிழ்விக்கும். உணர்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் பரிசுகள் இவர்களுக்கு எப்போதும் சிறந்தவை.
மனதை புரிந்துகொண்டால் பரிசு இனிக்கும்.!
ஒரு ராசிக்காரரின் மனதையும் குணத்தையும் புரிந்து கொண்டு பரிசு தேர்வு செய்வது, வெறும் பரிசளிப்பு செயலாக இல்லாமல், உள்ளங்களைக் கவரும் உண்மையான பிணைப்பை உருவாக்குகிறது. நட்சத்திரங்கள் சொல்வதை நம்பினால், ராசிக்கேற்ப பரிசு கொடுப்பது உறவுகளை மேலும் உறுதியானதாக மாற்றும்.