MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: வக்கிரம் அடையும் சுக்கிரன்.! 5 ராசிகளுக்கு அட்டகாசமான யோகம்.! பணத்தட்டுப்பாடே இனி இருக்காது.!

Astrology: வக்கிரம் அடையும் சுக்கிரன்.! 5 ராசிகளுக்கு அட்டகாசமான யோகம்.! பணத்தட்டுப்பாடே இனி இருக்காது.!

வக்கிரம் அடையும் சுக்கிரனால் 5 ராசிகளுக்கு பணவரவு, பொருளாதார முன்னேற்றம், புதிய வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. அந்த 5 ராசிகள் யார்? என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

4 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Sep 23 2026, 06:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
வெற்றியும் சந்தோஷமும் நிம்மதியும் இனி உங்களுக்கே.!
Image Credit : Asianet News

வெற்றியும் சந்தோஷமும் நிம்மதியும் இனி உங்களுக்கே.!

அப்பாடா இனி நல்ல நேரம் தொடங்கியாச்சு. உண்மைதாங்க சுக்கிரன் சிலருக்கு அள்ளி அள்ளி கொடுக்க போகிறார். அதுவும் எதிர்பாராத சமையத்தில். வேத சோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களின் அதிபதிகளில் சுக்கிர பகவான் ‘தைத்ய குரு’ (அசுர குரு) என்றும், களத்திர காரகன், தன காரகன், போஜன காரகன் என்றும் போற்றப்படுகிறார். மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருள் செல்வம், சொகுசு வாழ்க்கை, ஆடம்பரம், காதல், கலை, வாகனம் மற்றும் சுபயோகங்களை அருளும் முதன்மை கிரகமாக சுக்கிரன் விளங்குகிறார். பொதுவாக, சோதிட கணக்கீடுகளின்படி ஒரு கிரகம் சூரியனுக்கு அருகில் செல்லும்போது அஸ்தமனம் அடைவதும், புவி ஈர்ப்பு மற்றும் சுற்றுப்பாதை வேக மாறுபாட்டால் ‘வக்கிரம்’ (Retrograde) அடைவதும் இயற்கை நிகழ்வுகளாகும். ஒரு சுப கிரகம் வக்கிரமடையும் போது, அது தன் இயல்பான பலனை விட பல மடங்கு அதிக வலுப்பெற்று (வக்கிர பலம்/சேஷ்டா பலம்) சுப பலன்களை வாரி வழங்கும் என்பது சோதிட விதி. அந்த வகையில், சுக்கிரனின் இந்த வக்கிர நகர்வு சில குறிப்பிட்ட ராசிகளுக்கு யோக பலன்களையும் நிதி சுதந்திரத்தையும் தரவுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
சுக்கிரன் எப்போது வக்கிரம் அடைகிறார்?
Image Credit : Asianet News

சுக்கிரன் எப்போது வக்கிரம் அடைகிறார்?

கிரகங்களின் கோசாரப் பெயர்ச்சியில் சுக்கிரன் சுமார் 18 மாதங்களுக்கு (420 நாட்கள்) ஒருமுறை வக்கிர நிலையினை அடைவார். இந்த வக்கிர காலம் தோராயமாக 40 முதல் 42 நாட்கள் வரை நீடிக்கும். இக்காலகட்டத்தில், சுக்கிரன் தனது வழக்கமான ராசி நகர்வுக்கு மாறாக, பின்னோக்கி நகர்வது போன்ற சோதிடத் தோற்றத்தைப் பெறுவார். இந்த வக்கிரப் பெயர்ச்சி காலத்தில் சுக்கிரனின் பார்வை மற்றும் சேர்க்கை பெறும் வீடுகள் பெரும் மாற்றங்களைச் சந்திக்கும். குறிப்பாக, கேந்திர மற்றும் கோண வீடுகளில் சுக்கிரன் சுபத்துவமடையும் போது, அது தன யோகமாக உருவெடுக்கிறது. இதையும் கிளிக் செய்யுங்களேன் - சிம்மத்தில் நுழையும் குரு! அற்புத அதிர்ஷ்டத்தை பெறும் 5 ராசிகள்! இனி வேற லெவல் வாழ்க்கை இவர்களுக்கு!

38
ரிஷப ராசி (Taurus): (ஸ்வக்ஷேத்திர யோகம்)
Image Credit : ChatGPT

ரிஷப ராசி (Taurus): (ஸ்வக்ஷேத்திர யோகம்)

வீடு வாங்கும் யோகத்தையும், நில புலன்கள் வாங்கும் யோகத்தையும் சுக்கிரன் தரப்போகிறார் உங்களுக்கு. செமத்தியா முதலீடு செய்து ராஜவாழ்க்கை வாழ இதுவே சரியான நேரமாகம். ஸ்வக்ஷேத்திர யோகம் உங்களை உச்சானி கொம்பில் வைக்கும். ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன் லக்னாதிபதியாகவும் அஷ்டமாதிபதியாகவும் செயல்படுபவர். சுக்கிரன் வக்கிரமடைவதால் ரிஷப ராசியினருக்கு 'லக்னாதிபதி பலம்' கூடுகிறது.

தன வரவு: லக்ன சுபத்துவத்தால் நிலுவையில் இருந்த வராக் கடன்கள் மற்றும் பூர்வீகச் சொத்து வழக்குகளில் வெற்றி கிடைத்து தன வரவு பெருகும்.

தொழில்: தொழில் ஸ்தானத்தில் புதிய முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தைத் தரும். ருசக யோகம் அல்லது சுக்கிரனின் சுப பார்வையால் வியாபார விரிவாக்கம் சாத்தியமாகும்.

இதையும் கிளிக் செய்யுங்களேன் - செப்டம்பர் 21 முதல் 27 வரை.! உங்க வாரம் எப்படி இருக்கும்? நியூமராலஜி பலன்கள் இதோ!

48
மிதுன ராசி(Gemini): பூர்வ புண்ணிய யோகம்
Image Credit : ChatGPT

மிதுன ராசி(Gemini): பூர்வ புண்ணிய யோகம்

மிதுன ராசிக்கு பூர்வ புண்ணிய யோகம் முன்னேற்ற பாதையில் அழைத்து செல்கிறத. மிதுன லக்னத்திற்கு சுக்கிரன் பஞ்சமாதிபதியாகவும் (5-ம் அதிபதி) மற்றும் விரயாதிபதியாகவும் அமைகிறார். இது பொருளாதார நிலையை மேம்படுத்தி புகழையும் நற்பெயரையும் தரும். குடும்பத்திலும் சுற்றத்தார் மத்தியிலும் மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தி தரும் என்கின்றனர் ஜோதிட வல்லுணர்கள்.

அதிர்ஷ்டம்: ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுவதால் எதிர்பாராத திடீர் தன லாபமும், பங்குச்சந்தை மற்றும் ஊக வணிகத்தில் நல்ல லாபமும் கிடைக்கும்.

உத்தியோகம்: உத்தியோக ஸ்தானத்தில் தடையாய் இருந்த பதவி உயர்வும், நிலுவை ஊதியமும் கைக்கு வந்து சேரும். கடன் சுமை முற்றிலும் அகலும்.

இதையும் கிளிக் செய்யுங்களேன் - தர்ம கர்மாதிபதி யோகத்தால் இவ்ளோ கிடைக்குமா? இனி இந்த 4 ராசிகளுக்கும் தங்க தட்டில் சாப்பாடு.! பென்ஸ் காரில் பயணம்.!

58
சிம்ம ராசி(Leo): லாப மற்றும் கேந்திர யோகம்
Image Credit : ChatGPT

சிம்ம ராசி(Leo): லாப மற்றும் கேந்திர யோகம்

சிம்ம ராசியினருக்கு லாப மற்றும் கேந்திர யோகம் லாட்டரி சீட்டு போன்ற அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறது. தொட்டது எல்லாம் காஸ்ட்லி பொருட்களாக மாறும். சிம்ம ராசிக்கு சுக்கிரன் மூன்றாம் மற்றும் பத்தாம் அதிபதியாக (கர்மாதிபதி) செயல்படுகிறார். இதனால் பதவியும் பட்டமும் கொடுக்கும். செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். உங்கள் பேச்சை கேட்ட சுற்றிலும் ஆயிரம் பேர் நிற்பர். நிம்மதி கிடைக்கும். உழைப்பு ஏற்ற பலன் கிடைக்கும்.

தொழில் வளம்: பத்தாம் அதிபதி வக்கிர பலம் பெறுவது ‘கர்ம ஜீவன யோகத்தை’ உருவாக்கும். தொழிலில் புதிய கூட்டாண்மைகள் மூலம் மிகப்பெரிய அளவில் நிதி வளர்ச்சி உண்டாகும்.

சமூக அந்தஸ்து: தன காரகனின் அருளால் சமூகத்தில் கௌரவம், ராஜயோக வாழ்க்கை மற்றும் அசையாச் சொத்துக்கள் சேர்க்கை ஏற்படும்.

இதையும் கிளிக் செய்யுங்களேன் - ராகுவுடன் கூட்டணி அமைத்த புதன்.! கேதுவை அணைத்துக்கொண்ட குரு.! இனி 4 ராசிகளுக்கு சிங்கார வாழ்க்கை.!

68
துலா ராசி (Libra): ராசிநாதன் சேஷ்டா பலம்
Image Credit : Asianet News

துலா ராசி (Libra): ராசிநாதன் சேஷ்டா பலம்

துலா ராசியினர் ராசிநாதன் சேஷ்டா பலத்தால் துள்ளி குதிக்கும் யோகத்தை பெறவுள்ளனர். துலாம் ராசிக்கு அதிபதியான சுக்கிரன் வக்கிர நிலை அடையும் போது மிகுந்த ‘சேஷ்டா பலம்’ பெறுகிறார். இதனால் நினைக்கும் எல்லா நல்ல விஷயங்களும் நடக்கும். அடுத்தவர்களக்கு உதவும் நிலையில் நீங்கள் இருப்பீர்கள். மச்சக்காரன்டா என மற்றவர்கள் மெச்சும் அளவில் இந்த யோகம் உங்களை உச்சத்தில் வைக்கும்.

கடன் நிவாரணம்: ஆறாம் வீட்டின் ஆதிபத்திய தோஷங்கள் விலகி, நீண்ட நாட்களாக ஆட்டிப்படைத்த கடன்கள் மற்றும் ஆரோக்கியக் குறைபாடுகள் நிவர்த்தியாகும்.

சுப நிகழ்வுகள்: தன ஸ்தானம் சுபத்துவம் அடைவதால் குடும்பத்தில் மங்கல காரியங்கள் கைகூடும். பணத்தட்டுப்பாடு என்ற பேச்சே இன்றி சேமிப்பு பல மடங்காக உயரும்.

இதையும் கிளிக் செய்யுங்களேன் - சனி பகவான் அருள் பெறப்போகும் ராசிகள்.! தொழில், பணம், குடும்பத்தில் என்ன மாற்றம்? முழு பலன்கள் இதோ!

78
மகர ராசி(Capricorn): யோக காரக பலன்
Image Credit : ChatGPT

மகர ராசி(Capricorn): யோக காரக பலன்

மகர ராசியினரை யோக காரக பலன் நிம்மதியையும் சந்தோஷத்தையும் சகல சௌபாக்கியங்களையும் வழங்க போகிறது. மகர லக்னத்திற்கு சுக்கிரன் மட்டுமே பூரண ‘யோக காரகன்’ (4 மற்றும் 9-ஆம் அதிபதி) ஆவார். கேந்திர-கோணாதிபதியான சுக்கிரனின் வக்கிர நிலை அதிர்ஷ்டத்தின் உச்சத்தைத் தரும்.

பாக்கிய யோகம்: ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானம் விழிப்படைவதால் தந்தையின் வழியில் ஆதாயமும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளும் தேடி வரும்.

சொத்து யோகம்: நான்காம் வீட்டின் பலனால் புதிய வீடு, சொகுசு வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகி, பொருளாதார நிலை உன்னதமான நிலையை அடையும்.

இதையும் கிளிக் செய்யுங்களேன் - எதிரிகளை அசால்டாக வெல்லும் 4 ராசிகள்! அன்பும் தைரியமும் இவர்களின் பலம்! உங்க ராசி இருக்கா?

88
சுக்கிர அருள் பெற பரிகாரங்கள்
Image Credit : Asianet News

சுக்கிர அருள் பெற பரிகாரங்கள்

சுக்கிரனின் வக்கிர காலத்தில் அதன் முழு சுப பலன்களையும் பெறவும், ஜாதகத்தில் உள்ள சுக்கிர தோஷங்களை நிவர்த்தி செய்யவும் கீழ்க்கண்ட எளிய பரிகாரங்களைச் செய்யலாம்

லட்சுமி வழிபாடு: வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபமேற்றி, தாமரை மலர் சமர்ப்பித்து ‘ஸ்ரீ சூக்தம்’ பாராயணம் செய்வது விசேஷமானது.

தான தர்மங்கள்: வெள்ளிக்கிழமை தோறும் ஏழை பெண்களுக்கு அல்லது அந்தணர்களுக்கு மொச்சைப்பயறு, வெள்ளை நிற ஆடைகள் அல்லது கற்கண்டு தானமாக வழங்கலாம்.

சுக்கிர கிரக மந்திரம்: தினசரி காலையில் "ஓம் தத்புருஷாய வித்மஹே சுக்கிரதேவாய தீமஹி தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்" என்ற சுக்கிர காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிப்பது தன ஆகர்ஷணத்தை உண்டாக்கும்.

சுவாதி / பரணி / பூரம் நட்சத்திர வழிபாடு: சுக்கிரனின் நட்சத்திர நாட்களான பரணி, பூரம், பூராடம் நாட்களில் ரங்கநாதர் அல்லது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தரிசனம் செய்வதும் சுக்கிர பலனை அதிகரிக்கும்.

சுக்கிரனின் இந்த வக்கிர நகர்வு என்பது வெறும் கிரக மாற்றமல்ல; அது குறிப்பிடப்பட்ட 5 ராசியினரின் வாழ்விலும் வறுமையை விரட்டி, சுபிட்சத்தையும் தன தானிய விருத்தியையும் அருளக்கூடிய பொன்னான காலமாகும். ஜோதிட விதிப்படி சுபக் கிரகங்களின் வக்கிர நிலை எப்போதும் நன்மையையே பயக்கும் என்பதால், நம்பிக்கையுடனும் முறையான இறை வழிபாட்டுடனும் செயல்பட்டால் பணத்தட்டுப்பாடற்ற வளமான வாழ்க்கையைப் பெற முடியும்.

இதையும் கிளிக் செய்யுங்களேன் - புரட்டாசியில் பிறக்கும் சுக்கிர யோகம்.! 4 நட்சத்திரங்கள் காட்டில் பணமழை.! இனி ஆடி கார்லதான் போகப்போறீங்க.!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்
ஆன்மீகம்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mars Transit : பூரம் நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, ராஜயோகம் தேடி வரும்!
Recommended image2
Venus Retrograde : வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்... தீபாவளிக்குப் பிறகு பணக்கார யோகத்தைப் பெறும் 7 ராசிகள்!
Recommended image3
11:11 ஏஞ்சல் நம்பர் தரும் ஆச்சரிய பலன்கள்: இது வெறும் தற்செயல் இல்லையாம்... நிஜக் காரணம் இதோ!
Related Stories
Recommended image1
Astrology: சிம்மத்தில் நுழையும் குரு! அற்புத அதிர்ஷ்டத்தை பெறும் 5 ராசிகள்! இனி வேற லெவல் வாழ்க்கை இவர்களுக்கு!
Recommended image2
Astrology: தர்ம கர்மாதிபதி யோகத்தால் இவ்ளோ கிடைக்குமா? இனி இந்த 4 ராசிகளுக்கும் தங்க தட்டில் சாப்பாடு.! பென்ஸ் காரில் பயணம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved