MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: சுக்கிரன் ஆட்டம் ஆரம்பம்.! இனி 3 ராசிகளுக்கு காதல் பொங்கி வழியுமாம்.! 3 ராசிகளுக்கு தங்க புதையல் கிடைக்குமாம்.!

Astrology: சுக்கிரன் ஆட்டம் ஆரம்பம்.! இனி 3 ராசிகளுக்கு காதல் பொங்கி வழியுமாம்.! 3 ராசிகளுக்கு தங்க புதையல் கிடைக்குமாம்.!

ஜூலை மாதத்தில் சுக்கிரனின் பலத்தால் 3 ராசியினருக்கு காதல் வாழ்க்கை மலரவும், 3 ராசியினருக்கு தங்க புதையல் போன்ற பணவரவு மற்றும் தொழில் வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த காலகட்டம் அன்பையும் செல்வத்தையும் ஒருசேர வழங்கும் அதிர்ஷ்ட நேரமாக அமையலாம்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 24 2026, 09:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
அன்பும், தங்க புதையலும் ஒன்னா கிடைச்சா.!
Image Credit : AI

அன்பும், தங்க புதையலும் ஒன்னா கிடைச்சா.!

ஜூலை மாதத்தில் ஜோதிட ரீதியாக பல முக்கியமான மாற்றங்கள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சுக்கிரன் பலம் பெறும் காலமாக இருப்பதால் காதல், திருமணம், செல்வம், ஆடம்பரம், அழகு, வசதி, குடும்ப மகிழ்ச்சி போன்ற விஷயங்களில் பல ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்கலாம். அதிலும் 3 ராசிகளுக்கு காதல் வாழ்க்கை புதிய திருப்பத்தை எடுக்கக்கூடுமாம். அன்பும் அரனைப்பும் அதிகரித்து திருமண வாழ்க்கை சந்தோஷமாவும், மகிழ்ச்சியாகவும் இருக்குமாம். அதே நேரத்தில் மற்றொரு 3 ராசிகளுக்கு எதிர்பாராத பணவரவு, சொத்து சேர்க்கை, தொழில் வளர்ச்சி போன்ற "தங்க புதையல்" போன்ற வாய்ப்புகள் உருவாகலாம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.  இந்த அதிர்ஷ்ட நேரத்தை சரியாக பயன்படுத்தினால் மிகப்பெரிய வெற்றிகளையும் சாதனைகளையும் படைக்கலாம் என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
காதல் மலரும் ராசி – ரிஷபம்
Image Credit : Asianet News

காதல் மலரும் ராசி – ரிஷபம்

சுக்கிரனின் ஆதிக்க ராசியான ரிஷபத்திற்கு ஜூலை மாதம் காதல் ரீதியாக மிகவும் சிறப்பான காலமாக அமையலாம்.  பிடித்தவர்களுடன் சேரும் நேரம் உங்களுக்கு நெருங்கிவிட்டது.  நீண்ட நாட்களாக மனதில் வைத்திருந்த காதலை வெளிப்படுத்த தைரியம் கிடைக்கும். ஏற்கனவே காதலில் இருப்பவர்களுக்கு உறவு மேலும் வலுவடையும் என்கின்றனர் ஜோதிடர்கள். குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமண பேச்சுகளும் முன்னேற வாய்ப்புள்ளதால் உங்கள் வாழ்வில் கெட்டிமேளம் கொட்டும் சத்தம் கேட்கப்போகிறது. கணவன்-மனைவி இடையே இருந்த சிறிய கருத்து வேறுபாடுகள் கூட மறைந்து, மீண்டும் அன்பு அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகலாம். உருகி உருகி காதலித்து வாழ்வை இன்பமயமாக மாற்றிக்கொள்ளும் காலமிது என்றால் அது மிகையல்ல.!

38
இதயம் குளிரும் தருணம் – துலாம்
Image Credit : Asianet News

இதயம் குளிரும் தருணம் – துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கும் சுக்கிரன் அருள் முழுமையாக கிடைக்கக்கூடிய காலம் இது. தனிமையில் இருந்தவர்களின் வாழ்க்கையில் புதிய நபர் ஒருவர் நுழைய வாய்ப்புள்ளது. பழைய காதல் மீண்டும் மலரவும், பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரவும் வாய்ப்பு இருக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, உறவுகளில் நம்பிக்கை அதிகரிக்கும்.

48
காதல் வெற்றியின் உச்சம் – மீனம்
Image Credit : Asianet News

காதல் வெற்றியின் உச்சம் – மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் உணர்வுகள் நிறைந்த காலமாக இருக்கும். காதல் தொடர்பான தடைகள் மெதுவாக விலகலாம். நீண்ட நாள் காத்திருந்த நல்ல செய்தி கிடைக்கலாம். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டில் இருக்கும் துணையுடன் மீண்டும் இணையும் வாய்ப்பும் சிலருக்கு அமையலாம். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான திருப்பங்கள் கிடைக்கும் காலமாக இது அமையக்கூடும்.

58
தங்க புதையல் போன்ற அதிர்ஷ்டம் – சிம்மம்
Image Credit : Asianet News

தங்க புதையல் போன்ற அதிர்ஷ்டம் – சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு பணவரவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கலாம். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது புதிய முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக முடங்கியிருந்த பணமும் கைக்கு வரக்கூடும். இந்த மாதம் எடுத்த முயற்சிகள் எதிர்கால செல்வத்திற்கான அடித்தளமாக அமையலாம்.

68
செல்வம் சேர்க்கும் யோகம் – மகரம்
Image Credit : Asianet News

செல்வம் சேர்க்கும் யோகம் – மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சொத்து தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கலாம். வீடு, நிலம் வாங்கும் வாய்ப்புகள் உருவாகலாம். குடும்ப தொழிலில் வளர்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கலாம். புதிய வருமான வழிகள் திறக்கப்படலாம். சேமிப்பு அதிகரித்து நிதி நிலைமை வலுப்பெறும் வாய்ப்பும் காணப்படுகிறது.

78
அதிர்ஷ்ட கதவு திறக்கும் – தனுசு
Image Credit : Asianet News

அதிர்ஷ்ட கதவு திறக்கும் – தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் புதிய முயற்சிகள் வெற்றியை தரக்கூடிய காலமாக அமையலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். வெளிநாட்டு வாய்ப்புகள், தொழில் விரிவாக்கம் மற்றும் முதலீட்டு லாபங்கள் கிடைக்கலாம். எதிர்பாராத பரிசு, வாரிசு சொத்து அல்லது கூடுதல் வருமானம் கிடைக்கும் சாத்தியங்களும் சிலருக்கு இருக்கலாம். வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் கணிசமாக உயரக்கூடும்.

88
எதிர்பாராத அதிர்ஷ்டங்கள், பொருளாதார முன்னேற்றம், தொழில் வளர்ச்சி
Image Credit : Asianet News

எதிர்பாராத அதிர்ஷ்டங்கள், பொருளாதார முன்னேற்றம், தொழில் வளர்ச்சி

ஜூலை மாதம் சுக்கிரனின் அருளால் காதலும் செல்வமும் ஒருசேர மலரும் காலமாக சில ராசிக்காரர்களுக்கு அமையலாம். ரிஷபம், துலாம், மீனம் ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கையில் இனிய திருப்பங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிம்மம், மகரம், தனுசு ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றம், தொழில் வளர்ச்சி மற்றும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் அமையலாம். இருப்பினும் ஜோதிட பலன்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதக அமைப்பைப் பொறுத்து மாறுபடும் என்பதை நினைவில் கொண்டு, இதை பொதுவான ஜோதிடக் கணிப்பாகவே பார்க்க வேண்டும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்
ஏசியாநெட் நியூஸ்
செய்திகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rahu Ketu Transit : சர்ப்பக் கிரக பெயர்ச்சி..ராகு-கேது மாற்றத்தால் வாழ்க்கையில் திடீர் திருப்பம் காணப்போகும் 12 ராசிகள்!
Recommended image2
Guru Chandal Yoga : குரு – கேது சேர்க்கையால் உருவாகும் குரு சண்டாள யோகம்... 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் அதிரடி பலன்கள்!
Recommended image3
Tri-Kona Rajayoga : அரசு வேலை, வெளிநாடு செல்லும் வாய்ப்பை வழங்கும் திரிகோண யோகம்! அந்த 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை?
Related Stories
Recommended image1
Astrology: ஏழரை சனிக்கு செக்மேட் வைத்த சுக்கிர திசை..! இனி காலத்துக்கும் இந்த ராசிகாரர்கள் கோடீஸ்வரர்கள்..!
Recommended image2
Astrology: உறவுகளை மன்னிக்கும் 3 ராசிகள்.! பரம எதிரியே உதவி கேட்டாலும் ஓடிச்சென்று உதவுவாங்களாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved