MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: ராகு பார்வையால் தங்க தட்டில் சாப்பிடப்போகும் 4 ராசிகள்.! மாசியில் வீட்டிற்குள் வந்து குடியேறப்போகும் குபேரன்.! இனி பொற்காலம் ஆரம்பம்.!

Astrology: ராகு பார்வையால் தங்க தட்டில் சாப்பிடப்போகும் 4 ராசிகள்.! மாசியில் வீட்டிற்குள் வந்து குடியேறப்போகும் குபேரன்.! இனி பொற்காலம் ஆரம்பம்.!

மாசி மாதத்தில் ராகுவின் இடப்பெயர்ச்சியால் நான்கு ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த சாதகமான கிரக நிலைகள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி, செல்வ வளத்தை பெருக்கும்.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 10 2026, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
நல்ல காலம் பொறக்குது.! நல்ல காலம் பொறக்குது.!
Image Credit : Social Media

நல்ல காலம் பொறக்குது.! நல்ல காலம் பொறக்குது.!

இனி இந்த 4 ராசிகளுக்கும் நல்ல காலம் பொறக்கப்போகுது மக்களே.!ஜோதிடத்தில் கிரகங்களின் இடப்பெயர்ச்சி மனிதர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் நவகிரகங்களில் மிக வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தும் கிரகங்களில் ஒன்றாக நிழல் கிரகம் ராகு கருதப்படுகிறார். ராகு எப்போதும் தீமையை மட்டுமே தருவான் என்றில்லை, சில நேரங்களில் அதிர்ஷ்டத்தையும் எதிர்பாராத உயர்வையும் காசு பணத்தையும் பதவியையும் வெற்றியையும் சந்தோஷத்தையும் தரக்கூடியவன். மாசி மாதத்தில் உருவாகும் கிரக அமைப்புகள் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு பணவரவு, அதிர்ஷ்ட வாய்ப்புகள், புதிய முன்னேற்றம் போன்ற பல நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. அந்த வகையில் செல்வ வளம் அதிகரிக்கக்கூடிய நான்கு ராசிகளின் நிலையை இர்போது விரிவாக பார்க்கலாம்.

26
ரிஷபம் - மாதம் முழுவதும் உங்கள் காட்டில் பணமழை.!
Image Credit : Asianet News

ரிஷபம் - மாதம் முழுவதும் உங்கள் காட்டில் பணமழை.!

மாசி மாதத்தில் ராகுவின் பார்வை நன்மையாக அமையும் ராசிகளில் முதலில் குறிப்பிடப்படுவது ரிஷபம். இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு பணவரவு பல மடங்கு அதிகரிக்கும் சூழல் உருவாகும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வந்து சேறும். எப்போதோ கொடுத்து மறந்தோ போயிருந்த பணம் கையிக்கு வந்து சேரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த செக் வசூலாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதுடன் அதனால் செல்வ வளம் பெருகும். இதுவரை நிலவி வந்த மனக்குழப்பங்கள் நீங்கி, சண்டை சச்சரவுகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறலாம். சொத்து சேர்க்கை அல்லது வீடு தொடர்பான நல்ல செய்திகளும் மாதம் முழுவதும் வந்துகொண்டே இருக்கும்.பொருளாதார ரீதியாக ஒரு பாதுகாப்பான நிலையை அடையும் காலமாக இது அமையும்.

Related Articles

Related image1
Astrology: சுக்கிர பகவானுக்கு மிகவும் பிடித்த 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா? இவங்களுக்கு பணம் சேர்ந்துட்டே இருக்குமாம்.! உங்க ராசி இருக்கா?
Related image2
Astrology: பொங்கல் முடிந்த கையோடு குரு பகவான் உருவாக்கும் சிறப்பு ராஜயோகம்.! இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்.!
36
சிம்மம் - வெளிநாடுகளில் இருந்து பணம் வருமாம்
Image Credit : AI Generated

சிம்மம் - வெளிநாடுகளில் இருந்து பணம் வருமாம்

அடுத்ததாக சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த கிரக நிலை முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள். பணியிடத்தில் மதிப்பு உயரும் வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் பல மடங்கு அதிகரிக்கலாம். வெளிநாட்டு தொடர்புகள் அல்லது புதிய ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அமெரிக்கக டாலர்களில் வர்த்தகம் செய்ய வாய்ப்பு கிட்டும். மன அழுத்தம் குறைந்து வாழ்க்கையில் நம்பிக்கை அதிகரிக்கும் சூழல் உருவாகும். புதிய தொழில்கள் தொடங்குவீர்கள். ராகு காலத்தில் செய்யும் எல்லா செயல்களும் உங்களுக்கு யோகத்தை தரும். கொட்டி கொடுக்க போகும் ராகு உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் காலம் வந்து விட்டது.

46
தனுசு - காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது
Image Credit : Asianet News

தனுசு - காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது

நேர்மையின் பக்கம் நிற்கும் தனுசு ராசி நேயர்களே, நீங்கள் வைக்கும் குறி எதுவுமே தப்பிப்போகாது.  உழைப்பை மட்டும் முழுமையாக நம்பும் தனுசு ராசிக்காரர்களுக்கு மாசி மாதம் மிகவும் சாதகமான காலமாக அமையக்கூடும். முதலீடு தொடர்பான விஷயங்களில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கல்வி, தொழில், போட்டித் தேர்வு போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் செல்வ வளம் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். கிடைக்கும் பணத்தை மற்றவர்களுக்கு கொடுத்து உதவி செய்வீர்கள். செய்யும் தொழிலில் எதிர்பாராத ஆதாயங்கள் கிடைக்கக்கூடிய சூழல் உருவாகும். முயற்சிகளில் வெற்றி காணும் நிலை அதிகரிக்கும் என்பதால், பலருக்கும் இது ஒரு திருப்புமுனை காலமாக அமையலாம். இதுவரை நிலவி வந்த எல்ல பணசிக்கல்களும் காணாமல் போகும் நிலை உருவாகும்.

56
கும்பம் - மணி துட்டு பணம் பணம்
Image Credit : Asianet News

கும்பம் - மணி துட்டு பணம் பணம்

நேர்மையின் பக்கம் நிற்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மாற்றத்தையும் வளர்ச்சியையும் தரக்கூடியதாக இருக்கும். வியாபாரம் மற்ரும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொடர்புகள் மூலம் வருமானம் கிடைக்கும். எப்போதையும் விட சேமிப்பு அதிகரித்து பேங் பேலன்ஸ் உயரும். பணபரவு, வியாபார லாபம்,  சொத்து சேர்க்கை, மகசூல் அதிகரிப்பு போன்ற பல நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும். நீண்டநாள் திட்டங்கள் நிறைவேறும் சூழல் உருவாகலாம். மன உறுதியும் நம்பிக்கையும் அதிகரிக்கும் காலமாக இது அமையும்.

66
முயற்சி மற்றும் உழைப்பே வெற்றியை உறுதி செய்யும்
Image Credit : AI

முயற்சி மற்றும் உழைப்பே வெற்றியை உறுதி செய்யும்

மொத்தத்தில் ஜோதிடம் கூறும் பலன்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுதலாகவே பார்க்கப்பட வேண்டும். கிரக நிலைகள் சாதகமாக இருந்தாலும் முயற்சி மற்றும் உழைப்பே வெற்றியை உறுதி செய்யும் முக்கிய காரணிகள். மாசி மாதத்தில் சில ராசிகளுக்கு கிடைக்கக்கூடிய இந்த நல்ல சுட்டிக்காட்டுகள் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்பதே ஜோதிட பார்வையாகும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சனி பகவானை நேரில் சந்திக்கும் செவ்வாய்.! இந்த ராசிகளுக்கு இனிமே நல்லது மட்டுமே நடக்கும்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
சுக்கிரனுடன் இணைந்து ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 6 ராசிகளுக்கு நடக்கப்போகும் அதிரடி மாற்றம்.!
Recommended image3
திருவோண நட்சத்திரத்தில் அமரும் யமன்.! 4 ராசிகளின் வாழ்க்கை அடியோடு மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
Astrology: சுக்கிர பகவானுக்கு மிகவும் பிடித்த 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா? இவங்களுக்கு பணம் சேர்ந்துட்டே இருக்குமாம்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Astrology: பொங்கல் முடிந்த கையோடு குரு பகவான் உருவாக்கும் சிறப்பு ராஜயோகம்.! இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved