MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: இந்த 3 ராசியினரும் தொட்டதெல்லாம் துலங்கும்.! தகரம் கூட தங்கமாகும்.!

Astrology: இந்த 3 ராசியினரும் தொட்டதெல்லாம் துலங்கும்.! தகரம் கூட தங்கமாகும்.!

சிம்மம், தனுசு, மேஷ ராசிகள் தங்கள் கடின உழைப்பு, நம்பிக்கை மற்றும் அதிர்ஷ்டத்தால் தொட்டதெல்லாம் வெற்றியாக மாற்றும் திறன் கொண்டவர்கள். இவர்களின் ஆற்றல் மற்றும் மன உறுதி, தகரத்தையும் தங்கமாக மாற்றும் மந்திரமாக அமைகிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 23 2025, 07:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
"கண்ணை மூடிக்கொண்டு பிளைட் ஓட்டலாம்"
Image Credit : Twitter

"கண்ணை மூடிக்கொண்டு பிளைட் ஓட்டலாம்"

ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு ராசியும் தனித்துவமான பலங்களையும் ஆற்றல்களையும் கொண்டுள்ளது. ஆனால், சில ராசியினர் தங்கள் கடின உழைப்பு, நம்பிக்கை மற்றும் அதிர்ஷ்டத்தால் தொட்டதெல்லாம் வெற்றியாக மாற்றும் திறன் பெற்றவர்களாக விளங்குகின்றனர். அதுவும் சில ராசியினர் எதை செய்தாலும் அதில் வெற்றி மட்டுமே கிடைக்கும். அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கூட பிளைட் ஓட்டலாம். அந்த அளவுக்கு அவர்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சிம்மம் (Leo)
Image Credit : Getty

சிம்மம் (Leo)

“தகரம் கூட தங்கம் ஆகும்”

சிம்ம ராசியினரை பார்த்தாலே எதிர் தரப்பினர் அடங்கி போவார்கள் என்கிறது ஜோதிட நூல்கள். அப்படிப்பட்ட சிம்ம ராசிகாரர்கள் தொட்டதெல்லாம் துலங்குமாம். எதை செய்தாலும் அதில் வெற்றியை மட்டுமே அறுவடை செய்து ஆதாயம் ஈட்டுவராகளாம். சிம்ம ராசியினர் இயற்கையாகவே தலைமைப் பண்பு கொண்டவர்கள். இவர்களின் நம்பிக்கையும், உற்சாகமும், தைரியமும் இவர்களை எந்தத் துறையிலும் வெற்றி பெற வைக்கிறது. சிம்ம ராசியினர் தங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைப்பதோடு, மற்றவர்களை ஊக்குவிக்கவும் தவறுவதில்லை. இவர்களின் கவர்ச்சியான ஆளுமை, எந்தச் சூழ்நிலையிலும் மற்றவர்களை ஈர்க்கிறது. வியாபாரம், கலை, அரசியல் போன்ற துறைகளில் இவர்கள் தொட்டதெல்லாம் தங்கமாக மாற்றும் திறன் கொண்டவர்கள். சிம்ம ராசியினரின் மன உறுதியும், நேர்மையான அணுகுமுறையும் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை ஈர்க்கிறது. இவர்கள் தோல்வியை ஏற்காமல், ஒவ்வொரு சவாலையும் வெற்றியாக மாற்றுவதில் வல்லவர்கள்.

35
தனுசு (Sagittarius)
Image Credit : our own

தனுசு (Sagittarius)

"குறி வைச்சா இரை விழும்"

தனுசு ராசியினர் சுதந்திரத்தையும், பயணத்தையும், புதிய அனுபவங்களையும் விரும்புபவர்கள். இவர்களின் நம்பிக்கை மற்றும் ஆர்வம், எந்தத் தடையையும் தாண்டி வெற்றியை அடைய உதவுகிறது. தனுசு ராசியினருக்கு குரு கிரகத்தின் ஆதிக்கம் இருப்பதால், இவர்களுக்கு அதிர்ஷ்டம் எப்போதும் துணை நிற்கிறது. இவர்கள் எடுக்கும் முயற்சிகள், எவ்வளவு சவாலானவையாக இருந்தாலும், பெரும்பாலும் வெற்றியில் முடிகின்றன. கல்வி, ஆன்மீகம், மற்றும் சாகசத் துறைகளில் இவர்கள் தனித்து நிற்கின்றனர். தனுசு ராசியினரின் நேர்மறையான மனப்பான்மை, தகரத்தையும் தங்கமாக மாற்றும் ஆற்றலை அளிக்கிறது. தனுசு ராசியினர் எந்த தொழிலை செய்தாலும் அதில் லாபத்துடன் கூடிய இலக்கை கண்டிப்பாக அடைவார்களாம். ரஜினி சொல்வதை போல இவர்கள் குறி வைச்சா இரை விழும்... அதாவது இவர்கள் வைச்ச குறி தப்பாது.

45
மேஷம் (Aries)
Image Credit : freepik

மேஷம் (Aries)

"உருண்டு வர்ற பாலும் சிக்சர் ஆகும்"

மேஷ ராசியினர் தீவிரமான ஆற்றலும், முன்னோடி மனப்பான்மையும் கொண்டவர்கள். இவர்களின் தைரியமும், விடாமுயற்சியும் எந்தத் துறையிலும் வெற்றியை ஈட்ட உதவுகிறது. மேஷ ராசியினர் புதிய முயற்சிகளைத் தொடங்குவதில் வல்லவர்கள் மற்றும் தோல்விகளைப் பொருட்படுத்தாமல் முன்னேறுபவர்கள். இவர்களின் உற்சாகமும், முனைப்பும் மற்றவர்களை ஊக்குவிக்கிறது. வியாபாரம், விளையாட்டு, மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இவர்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக அமைகிறது. மேஷ ராசியினரின் உறுதியான மனநிலையும், துணிச்சலும் இவர்களை எப்போதும் முன்னணியில் வைத்திருக்கிறது. எதனை செய்தாலும் இன்முகத்துடன் செய்யும் ஆற்றல் கொண்ட மேஷ ராசியினர், தான் செய்யும் விஷயத்தில் அசால்டாக சிக்சர் அடிப்பார்கலாம். போகிற போக்கில் செய்யும் வேலைகள் எல்லாம் பல மடங்கு லாபம் கொடுக்குமாம். நிதானம் இவர்களின் பலன் என்பதால் தொழிலில் ஈசியா வெற்றி பெறுவார்கள் என்கிறது ஜோதிட நூல்கள்.

55
கடின உழைப்பும், அதிர்ஷ்டமும்
Image Credit : Twitter

கடின உழைப்பும், அதிர்ஷ்டமும்

சிம்மம், தனுசு, மேஷம் ஆகிய மூன்று ராசியினரும் தங்கள் தனித்துவமான பண்புகளால் தொட்டதெல்லாம் துலங்குகின்றனர். இவர்களின் கடின உழைப்பு, நம்பிக்கை, மற்றும் அதிர்ஷ்டம் இவர்களை வெற்றியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. இவர்களின் ஆற்றல் மற்றும் மன உறுதி, தகரத்தையும் தங்கமாக மாற்றும் மந்திரமாக அமைகிறது. இந்த ராசியினர் தங்கள் வாழ்க்கையில் எதைத் தொட்டாலும், அது வெற்றியாகவே மலர்கிறது. கடின உழைப்பாளர்களாக காணப்படும் இந்த ராசியினர் எதை செய்தாலும் அதற்கு கிரகங்களும், அதிர்ஷ்டமும் கை கொடுக்கும் என்கின்றனர் ஜோதிட வல்லுணர்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ஆன்மீகம்
ராசி பலன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Guru Peyarchi 2026 : குரு பெயர்ச்சி..மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் தரப்போகும் பலன்கள்!
Recommended image2
Vish Yoga : தீபாவளிக்குப் பின் உருவாகும் விஷ யோகம்... இந்த 5 ராசிகளுக்கு காத்திருக்கும் அடுக்கடுக்கான சோதனைகள்
Recommended image3
ஐயப்பனுக்கு மிகவும் பிடித்த 6 அதிர்ஷ்ட ராசிகள்.. சாஸ்தாவின் பரிபூரண அருள் யாருக்கு?
Related Stories
Recommended image1
Horoscope: நீங்க சிம்மராசியா.? புகழ், பொருள் குவியும்.! பெரிய பதவி நிச்சயம்.!
Recommended image2
முருகன் அருள் - "ஓம் சரவணபவ" சொன்னால் என்ன கிடைக்கும் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved