- Home
- Astrology
- Astrology ஆகஸ்ட் 28: சிம்ம ராசிக்கான இன்றைய பலன்.! குடும்ப பிரச்சினை முடிவுக்கு வரும்.! வழக்குகள் சாதகமாகும்.! வெற்றிக்கனி உங்கள் கையில்.!
Astrology ஆகஸ்ட் 28: சிம்ம ராசிக்கான இன்றைய பலன்.! குடும்ப பிரச்சினை முடிவுக்கு வரும்.! வழக்குகள் சாதகமாகும்.! வெற்றிக்கனி உங்கள் கையில்.!
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கை, தலைமைத்துவம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம், பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்கள், காதல், கல்வி, பயணம் என அனைத்திலும் நற்பலன்கள் கிடைக்கும்.

சிம்மம் (Leo): மணி, துட்டு, பணம், பணம்.!
இன்று தன்னம்பிக்கை மற்றும் தலைமைத் திறமை உங்களை முன்னேற்றம் அடையச் செய்யும். தொழிலில் உங்கள் யோசனைகள் ஏற்கப்படும். உயர் பொறுப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்களை தொடங்கலாம். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும்.
மகிழ்ச்சி பொங்கும் மாமு.!
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். கணவன்–மனைவிக்கிடையே சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், ஆனால் விரைவில் தீரும். பெற்றோரின் ஆரோக்கியம் சீராக இருக்கும். குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் காணலாம். நினைத்த காரியம் நிறைவேறும். விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும்.
புரிதல் தரும் சினேகம்.!
நண்பர்கள் மற்றும் சமூக வட்டத்தில் புதிய வாய்ப்புகள் தோன்றும். பயணங்கள் லாபம் தரும். மாணவர்களுக்கு வெற்றிகரமான நாள். தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பு அதிகம். காதலர்கள் இடையே இருந்த தவறான புரிதல் சரியாகும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் பது படத்திற்கு செல்வீர்கள். குடும்ப பிரச்சினை முடிவுக்கு வரும். வழக்குகள் சாதகமாகும். வெற்றிக்கனி உங்கள் கையில் கிடைக்கும்.
எதிரிகள் விலகி ஓடுவார்கள்.!
பழைய பாக்கிகள் பாக்கெட் வந்து சேரும். எதிரிகள் விலகி ஓடுவார்கள். தொழில் போட்டிகள் காணாமல் போகும். எடுத்த காரியம் டக்குன்னு முடியும். இன்றைய நாள் தன்னம்பிக்கையால் வெற்றியைப் பெறும். திட்டமிடல் மற்றும் நேர்த்தியான செயல்பாடுகள் முக்கியம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00–1:00 பரிகாரம்: நரசிம்மரை வணங்கவும்.