MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: ஆளுமைத் திறன் + வெற்றி.. இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் 'மெகா' அதிர்ஷ்டசாலிகள்! உங்க மாதம் இருக்கா?

Astrology: ஆளுமைத் திறன் + வெற்றி.. இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் 'மெகா' அதிர்ஷ்டசாலிகள்! உங்க மாதம் இருக்கா?

Astrology 4 Birth Months Destined for Success and Leadership: இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் ஆளுமைத் திறனுடன் வெற்றி பெற பிறந்தவர்கள். அவை என்னென்ன மாதங்கள்? என்பது குறித்து பார்ப்போம். 

2 Min read
Author : Rayar r
Published : May 12 2026, 06:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் 4 மாதங்கள்
Image Credit : AI

அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் 4 மாதங்கள்

ஒரு மனிதனின் குணாதிசயங்களையும், அவனது வெற்றிகளையும் தீர்மானிப்பதில் ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அந்த அளவிற்கு அவர் பிறந்த மாதத்திற்கும் முக்கியத்துவம் உண்டு என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வெற்றி என்பது ஒருவரின் உழைப்பைச் சார்ந்தது என்றாலும், சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்களுக்குப் பிறப்பாலேயே சில ஆளுமைத் திறன்கள் அமைந்துவிடுகின்றன. அவர்கள் மற்றவர்களை விட தங்கள் இலக்குகளை எளிதாக அடைந்து விடுகின்றனர். அந்த வகையில் அதிக வெற்றிகளை ஈர்க்கக்கூடிய அந்த 4 அதிர்ஷ்ட மாதங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
பிப்ரவரி (February)
Image Credit : Getty

பிப்ரவரி (February)

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் கூட்டத்தோடு கூட்டமாகச் செல்ல விரும்பாதவர்கள். தனித்து இயங்கக்கூடியவர்கள். இவர்களின் மிகப்பெரிய பலமே இவர்களது உள்ளுணர்வு (Intuition) தான். எந்தவொரு விஷயத்தையும் ஆழமாகச் சிந்திக்கும் திறன் கொண்ட இவர்கள், எதிர்காலம் குறித்து மிகத்தெளிவாக தெரிந்து வைத்திருப்பார்கள். இவர்களின் சிறப்பே வழக்கமான பாதையைத் தவிர்த்து, புதுமையான வழிகளில் சிந்தித்து வெற்றி காண்பார்கள் என்பது தான். முக்கியமாக படைப்பாற்றல் மிக்க துறைகளில் இவர்களது கொடி உயர்ந்து பறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Related image1
Astrology: இந்த 4 ராசி பெண்கள் அதி புத்திசாலிகள்! காதலில் இவர்களை ஏமாற்றவே முடியாது! உங்க ராசி இருக்கா?
Related image2
Today Rasi Palan : மேஷம் முதல் மீனம் வரை.! இன்று இந்த 8 ராசிகளுக்கு தலையெழுத்து மாறப்போகுது.! மே 3-ஆம் தேதிக்கான முழுமையான ராசி பலன்கள்.!
34
ஜூன் (June)
Image Credit : AI Generated

ஜூன் (June)

ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் மிகச்சிறந்த தொடர்புத் திறன் (Communication Skills) கொண்டவர்கள். எங்கே, எப்படிப் பேசினால் காரியம் கைகூடும் என்பது இவர்களுக்கு அத்துப்பிடி. இவர்களது நட்புவட்டமும், சமூகத் தொடர்புகளும் இவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை கொண்டு வரும். மக்கள் தொடர்பு, வியாபாரம் மற்றும் தலைமைத்துவப் பண்புகளில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

44
செப்டம்பர் (September)
Image Credit : Getty

செப்டம்பர் (September)

செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எதிலும் துல்லியத்தை எதிர்பார்ப்பார்கள். ஒரு வேலையை மேம்போக்காகச் செய்யாமல், அதன் நுணுக்கங்களைக் கவனித்துச் செய்வதில் கில்லாடிகளாக விளங்குவார்கள். இவர்களிடம் நேர்மையும், நீதியும் எப்போதும் மேலோங்கி இருக்கும். இவர்களின் நிதானமான அணுகுமுறையே இவர்களுக்கு நிலையான வெற்றியை கொடுக்கும் நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் இவர்களுக்கு ஈடுஇணை யாரும் இருக்க முடியாது

நவம்பர் (November)

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களை எவராலும் அவ்வளவு எளிதில் தடுத்து நிறுத்திவிட முடியாது. இவர்களிடம் இருக்கும் விடாமுயற்சி இவர்களைச் சவால்களைக் கண்டு அஞ்சாத வீரர்களாக மாற்றுகிறது. கடினமான சூழலையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் ரகசிய வித்தை இவர்களுக்கு நன்றாக தெரியும். சாகசங்கள் நிறைந்த பயணங்களிலும், பெரும் இலக்குகளை எட்டும் முயற்சியிலும் இவர்கள் வெற்றியாளர்களாகத் திகழ்வார்கள்.

பொறுப்பு துறப்பு: இந்த செய்தி கட்டுரை ஜோதிட சாஸ்திரங்களின் அடிப்படையில் சுவாரஸ்யமான நோக்கங்களுக்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. பிறப்பு என்பது ஒரு ஆரம்பம் மட்டுமே. கடின உழைப்பின் மூலம் தான் வெற்றி கிட்டும். ஒருவரின் குணாதிசயத்துக்கும் ஆளுமைக்கும் பிறந்த மாததுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை ஏசியாநெட் தமிழ் தெரிவித்துக் கொள்கிறது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Panchang Yog 2026: கூட்டணி அமைத்த சனி சுக்கிரன்.! 3 ராசிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்! பேங்க் பேலன்ஸ் டபுளாகும்!
Recommended image2
Uranus Transit 2026: கிருத்திகை நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் சக்தி வாய்ந்த கிரகம்.! 5 ராசிகளுக்கு பொன், பொருள், வசதிகள் குவியப்போகுது.!
Recommended image3
Astrology: சனி அமாவாசையில் அரிய ராஜயோகம்.! இந்த 5 ராசிகளுக்கு ஒரு வாரத்தில் ஜாக்பாட்.!
Related Stories
Recommended image1
Astrology: இந்த 4 ராசி பெண்கள் அதி புத்திசாலிகள்! காதலில் இவர்களை ஏமாற்றவே முடியாது! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Today Rasi Palan : மேஷம் முதல் மீனம் வரை.! இன்று இந்த 8 ராசிகளுக்கு தலையெழுத்து மாறப்போகுது.! மே 3-ஆம் தேதிக்கான முழுமையான ராசி பலன்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved