MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • அட்சய திருதியை நாளில் சுக்கிரன் பெயர்ச்சி.. சொந்த வீட்டில் அமரும் சுக்கிரனால் 4 ராசிகளுக்கு ராஜயோகம்.. உங்க ராசி இருக்கா?

அட்சய திருதியை நாளில் சுக்கிரன் பெயர்ச்சி.. சொந்த வீட்டில் அமரும் சுக்கிரனால் 4 ராசிகளுக்கு ராஜயோகம்.. உங்க ராசி இருக்கா?

Akshaya Tritiya 2026: அட்சய திருதியை நாளான இன்று சுக்கிரன் பெயர்ச்சி அடைகிறார். இதனால் நற்பலன்களை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar A
Published : Apr 19 2026, 01:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரிஷப ராசிக்குள் பிரவேசம் செய்யும் சுக்கிர பகவான்
Image Credit : AI

ரிஷப ராசிக்குள் பிரவேசம் செய்யும் சுக்கிர பகவான்

2026ம் ஆண்டுக்கான அட்சய திருதியை இன்று (ஏப்ரல் 19) கொண்டாடப்படுகிறது. அட்சய என்ற சொல்லுக்கு குறையாதது என்பது பொருளாகும். ஆகவே இந்த நாளில் தொடங்கும் காரியங்கள் மற்றும் வாங்கும் பொருட்கள் பன்மடங்கு பெருகும் என்பது ஐதிகம். இதனால் தான் மக்கள் இன்று தங்கம் அல்லது தங்கள் சக்தியால் வாங்க முடிந்த பொருட்களை வாங்குகிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் இன்றைய மங்களகரமான நாளில் செல்வத்துக்கு அதிபதியான சுக்கிர பகவான் ரிஷப் ராசிக்குள் பிரவேசம் செய்கிறார். இதனால் 4 ராசிக்காரர்கள் ராஜயோகம் அடையப் போகிறார்கள். அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

சுக்கிர பகவானின் பெயர்ச்சி மேஷ ராசிக்கு மகாலட்சுமி யோகத்தை அளிக்கப் போகிறது. உங்களின் வாக்கு வன்மை வெளிப்படும். பேச்சால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துகள், பழைய பாக்கிகள் வைக்கு வரும். தொழில் புரிபவர்கள் நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்ள இது சரியான நேரமாகும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை வலுப்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு எதிபார்த்த பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த காலகட்டத்தில் உங்கள் வாக்கு ஸ்தானம் வலுவாக இருப்பதால் உங்கள் பேச்சுக்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

Related Articles

Related image1
தங்கம் வாங்க முடியலயா..? அட்சய திருதியை அன்று ரூ.10க்கு இந்த பொருள் வாங்குங்க; செல்வம் கொழிக்கும்..!
Related image2
அட்சய திருதியை நாளில் உருவான 5 ராஜயோகங்கள்.! இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் பொற்காலம் ஆரம்பிக்குது.!
35
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதன் காரணமாக கன்னி ராசிக்காரர்களுக்கு யோகமான காலமாகும். நிதிப் பிரச்சனைகள் நீங்கி பணப்புழக்கம் கணிசமாக உயரும். இந்த காலகட்டத்தில் தங்கம் அல்லது பங்கு சந்தைகளில் நீங்கள் முதலீடு செய்யலாம். பணியிடங்களில் உங்கள் உழைப்பு அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையேயான ஒற்றுமை பலப்படும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு மல்லிகை பூ சமர்ப்பித்து வழிபட்டால் சுக்கிரனின் அருள் மேலும் உங்களுக்கு கிடைக்கும்.

45
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

சுக்கிரனின் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு பல்வேறு வழிகளிலும் அதிர்ஷ்டத்தை கொட்டப் போகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பழைய சொத்துகள் அல்லது கடன்கள் கைக்கு வரும். நிதி சார்ந்து எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். ரியல் எஸ்டேட் அல்லது தங்கத்தில் முதலீடு செய்யலாம். குடும்ப உறவுகளில் இருந்த விரிசல்கள் நீங்கி ஒற்றுமை மேலேங்கும். கூட்டுத்தொழில் புரிவர்களுக்கு நல்ல காலமாகும். சுக்கிரன் எட்டில் மறைவது சில நேரங்களில் ஆரோக்கியத்தில் சிறு தொய்வைத் தரலாம். இந்த நாளில் ஏழைப் பெண்களுக்கு ஆடைகள் அல்லது இனிப்புகளை தானமாக வழங்குவது நற்பலன்களைக் கூட்டும். மகாலட்சுமியை வழிபட்டால் கூடுதல் யோகத்தை உருவாக்கும்.

55
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக பெரும் பாய்ச்சலை கொடுக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்தும் பணம் வந்து பையை நிரப்பும். பணியிடங்களில் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதே வேளையில் உடல்நலனின் கொஞ்சம் அக்கறை தேவை. சர்க்கரை மற்றும் நீர்ச்சத்து தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் வராமல் இருக்க விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஒட்டுமொத்தத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு இது பொருளாதாரரீதியாக நல்ல காலக்கட்டமாக அமைந்துள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ராசி பலன்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sun Rahu Conjunction 2026: சூரியன் - ராகு சேர்க்கையால் ஆபத்து! இந்த ராசிகாரர்கள் ரொம்பவே எச்சரிக்கையா இருக்கணும்!
Recommended image2
Office Vastu: அலுவலகத்தில் எந்த திசை பார்த்து அமர்ந்தால் நல்லது? ஜோதிடம், வாஸ்து கூறும் விளக்கம்!
Recommended image3
Numerology Birth Dates: இந்த தேதிகள்ல பிறந்த பொண்ணுங்க யாருக்கும் பயப்பட மாட்டாங்க! உங்க தேதி இருக்கா?
Related Stories
Recommended image1
தங்கம் வாங்க முடியலயா..? அட்சய திருதியை அன்று ரூ.10க்கு இந்த பொருள் வாங்குங்க; செல்வம் கொழிக்கும்..!
Recommended image2
அட்சய திருதியை நாளில் உருவான 5 ராஜயோகங்கள்.! இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் பொற்காலம் ஆரம்பிக்குது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved