- Home
- Astrology
- Birth Month: இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களை நம்பவே கூடாது.! காதலில் நேர்மையே இருக்காதாம்.!
Birth Month: இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களை நம்பவே கூடாது.! காதலில் நேர்மையே இருக்காதாம்.!
People born in certain month unfaithful in love : ஜோதிடத்தின் படி சில மாதங்களில் பிறந்தவர்கள் காதலில் நேர்மையற்றவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அந்த மாதங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Birth Month:
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய அடிப்படை குணம் நேர்மை. நேர்மையாக இருப்பது என்பது ஒருவருக்கு உயிர் மூச்சு போன்றது. நேர்மையாளர்களை இந்த உலகம் மதிக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக தற்போதைய காலத்தில் நேர்மையில்லாதவர்களே அதிகமாக இருக்கின்றனர். ஒரு நபரின் பிறந்த மாதம் என்பது அவர்களின் ஆளுமை, பழக்க வழக்கங்கள் மற்றும் நடத்தைகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. சில மாதங்களில் பிறந்தவர்கள் உறவுகளில் நேர்மையற்றவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த மாதங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பிப்ரவரி
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் சுதந்திரமான மனநிலை மற்றும் புதிய அனுபவங்களை தேடும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் காதல் உறவுகளில் உணர்ச்சி மிக்கவர்களாகவும் சில சமயங்களில் மாற்றத்தை விரும்புவார்களாகவும் இருக்கலாம். இவர்களின் இந்த சுதந்திரமான மனோபாவம் உறவுகளில் முழு அர்ப்பணிப்பு இல்லாதவர் அல்லது நேர்மையற்றவர் என்கிற தோற்றத்தை ஏற்படுத்தலாம். இருப்பினும் இவர்கள் தங்கள் துணையுடன் நேர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் அவர்களின் சுதந்திர ஆசை சில சமயங்களில் தவறாக புரிந்து கொள்ளப்படலாம்.
மே
மே மாதத்தில் பிறந்தவர்கள் பொதுவாக வசீகரமான ஆளுமை மற்றும் சமூகத்தில் எளிதில் பழகும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு மக்களை ஈர்க்கும் திறன் இயல்பாகவே இருக்கும். இந்த குணம் மற்றவர்களின் கவனத்தை பெறுவதற்கு வழிவகுக்கும். இது சில சமயங்களில் தவறான எண்ணங்களை உருவாக்கலாம். இவர்கள் ஒரு உறவுகளில் ஈடுபட்டால் அதில் உறுதியாக இருக்க முயற்சி செய்வார்கள். ஆனால் அவர்களின் சமூக ஆர்வம் மற்றும் புதிய நபர்களுடன் நட்பு கொள்ளும் ஆசை போன்றவை அவர்களை நேர்மையற்றவர்களாக காட்டலாம்.
ஜூலை
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் உணர்ச்சிவசப்படும் தன்மையும், வாழ்க்கையில் உற்சாகத்தை தேடும் பண்புகள் கொண்டவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் உறவுகளில் ஆழமான அன்பை வெளிப்படுத்துவார்கள். ஆனால் அவர்களின் உணர்ச்சி மாறுபாடுகள் சில சமயங்களில் உறவுகளில் புரிதல்களை பாதிக்கலாம். இவர்களின் உற்சாகத்தை தேடும் இயல்பானது புதிய அனுபவங்களை தேடுவதற்கு அவர்களை தூண்டலாம். இது உறவில் நேர்மையின்மை என்று தவறாக புரிந்து கொள்ளப்படலாம்.
அக்டோபர்
அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் சமநிலையான மனநிலை மற்றும் மற்றவர்களை ஈர்க்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். சமூகத்தில் பிரபலமாக இருக்க வேண்டும் என்கிற ஆசை மற்றவர்களுடன் நெருக்கமாக பழகுவதற்கு வழிவகுக்கும். இது அவர்களின் துணையின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தலாம். இருப்பினும் இவர்கள் உண்மையான அன்பையும் நம்பிக்கையும் மதிப்பவர்கள். ஆனால் அவர்களின் நடத்தை சில சமயங்களில் தவறாக புரிந்து கொள்ளப்படலாம்.
பொதுவான கணிப்பு மட்டுமே
ஜோதிடத்தின் அடிப்படையில் மேற்குறிப்பிடப்பட்ட மாதங்களில் பிறந்தவர்கள் உறவுகளில் நம்பிக்கை அற்றவர்களாக இருக்கலாம் என்று கருதப்பட்டாலும், இது பொதுவான கணிப்பு மட்டுமே. ஒரு நபரின் நடத்தை அவர்கள் பிறந்த மாதத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. தனிப்பட்ட குணாதிசயங்கள், வாழ்க்கை அனுபவங்கள், மனநிலை ஆகியவை உறவுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே இந்த கணிப்புகளை ஒரு பொதுவான கண்ணோட்டத்தில் மட்டுமே அணுக வேண்டும். உறவுகளில் நம்பிக்கையவ வளர்ப்பது என்பது மனம் திறந்த உரையாடல் மற்றும் புரிதல் மூலமே சாத்தியமாகும். உறவுகளில் நம்பிக்கையை பேணுவது என்பது தனிப்பட்ட முயற்சி மற்றும் பரஸ்பர புரிதலை பொறுத்தது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள், பொதுவான ஜோதிட கருத்துக்கள் அடிப்படையில் எழுதப்பட்டவை. இந்த தகவல்களை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களின் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் பொறுப்பேற்காது. ஒவ்வொருவரின் ஜாதகமும் மாறுபடும் என்பதால் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ள அனுபவமிக்க ஜோதிடரை அணுகுவது நல்லது)