- Home
- Astrology
- Kendra Yoga : கேந்திர யோகத்தால் அடிக்கப்போகுது ஜாக்பாட்... செப்டம்பரில் இந்த 4 ராசிகளுக்கு நல்ல காலம் பொறக்குது!
Kendra Yoga : கேந்திர யோகத்தால் அடிக்கப்போகுது ஜாக்பாட்... செப்டம்பரில் இந்த 4 ராசிகளுக்கு நல்ல காலம் பொறக்குது!
Saturn Mars Kendra Yoga : செவ்வாய் மற்றும் சனி கிரகங்கள் கேந்திர யோகத்தை உருவாக்குகின்றன. இதனால், நான்கு ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களின் தொழில் மற்றும் செல்வத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கேந்திர யோகத்தின் பலன்கள்
ஜோதிடத்தில் சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இந்நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி சனி மற்றும் செவ்வாய் 90 டிகிரி கோணத்தில் அமைவதால் கேந்திர யோகம் உருவாகும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த யோகம் கடின உழைப்பு, துணிச்சலான முயற்சிகள் மற்றும் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பதற்கான சாதகமான சூழலை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ஆகிய நான்கு ராசியினருக்கு குறிப்பாக சாதகமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தொழில் வளர்ச்சி முதல் பணவரவு வரை இவர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு செப்டம்பர் தொடக்கம் தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகளை கொண்டு வரக்கூடும். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைப்பதுடன், நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் இருந்த பணிகளை மீண்டும் கையில் எடுத்து வெற்றிகரமாக முடிக்கும் சூழல் உருவாகலாம்.
உங்களின் உழைப்புக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். இதன் மூலம் வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகளும் உருவாகக்கூடும்.
எனினும், வருமானம் அதிகரிக்கும் நேரத்தில் செலவுகளும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. காதல் மற்றும் குடும்ப உறவுகளில் இருந்த தவறான புரிதல்களை மனம் திறந்து பேசுவதன் மூலம் சரிசெய்ய முடியும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு தொழில் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நல்ல காலமாக இந்தக் காலகட்டம் அமையலாம். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகலாம்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் வேகமாக நிறைவு பெறும். குறிப்பாக தொழில் செய்பவர்களுக்கு பழைய வாடிக்கையாளர்கள் மூலமாக பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
பணத்தை கையாளும்போது சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். குடும்ப வாழ்க்கையிலும் எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். மாணவர்கள் தங்களின் விடாமுயற்சியால் நல்ல பலன்களைப் பெறக்கூடிய காலமாக இது அமையும்.
தனுசு
தனுசு ராசியினருக்கு தொழில் மற்றும் கூட்டுத் தொழில் தொடர்பான விஷயங்களில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இணைந்து முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.
புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைப்பதுடன், சரியான முடிவுகளை எடுப்பதன் மூலம் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய பாதைகளும் திறக்கப்படலாம்.
மேலும், செல்வாக்கு மிக்க நபர்களின் உதவி கிடைக்கும் வாய்ப்பும் இருப்பதாக ஜோதிடக் கணிப்புகள் கூறுகின்றன. காதல் வாழ்க்கையில் நம்பிக்கையும் புரிதலும் அதிகரிக்கலாம். குடும்பம் மற்றும் சமூகத்தில் உங்களுக்கான மதிப்பு, மரியாதை மற்றும் செல்வாக்கு உயரக்கூடும்.
மீனம்
மீன ராசியினருக்கு இந்த கேந்திர யோகம் நீண்ட நாட்களாக இருந்து வந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வாய்ப்பை வழங்கலாம். குறிப்பாக வேலை மற்றும் தொழில் தொடர்பான மாற்றங்களை மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கலாம்.
வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற திட்டம் இருந்தால், அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு ஏற்ற சூழல் உருவாகலாம். இருப்பினும் பண விஷயங்களில் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.
எதிர்காலம் மற்றும் காதல் வாழ்க்கை தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். குடும்பப் பொறுப்புகள் அதிகரித்தாலும், சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது.

