என்னது பெட் ரூம்ல செடி வைக்கணுமா? கணவன் மனைவி கட்டாயம் படிங்க..!!
Indoor Plants Vastu : வாஸ்து சாஸ்திரத்தின் படி, கணவன் மனைவியின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க படுக்கை அறையில் வைக்க வேண்டிய சில செடிகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

என்னது பெட் ரூம்ல செடி வைக்கணுமா? கணவன் மனைவி கட்டாயம் படிங்க..!!
வீட்டின் அலங்காரத்தில் கவனம் செலுத்துவது போலவே, தூங்கும் அறையிலும் அலங்காரம் மற்றும் தூய்மையிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இந்த அறை தான் கனவின் மனைவிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. முக்கியமாக கணவன் மனைவி தூங்கும் அருகில் எந்த விதமான வாஸ்து தோஷமும் இருக்கவே கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, கணவன் மனைவி இருவருக்கும் இடையே அன்பும் நல்லிணக்கமும் அதிகரிக்க படுக்கையறையில் நேர்மறை மற்றும் அமைதியானல் சூழல் இருப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் படுக்கை அறையில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் கணவன் மனைவி இடையே அடிக்கடி மோதல்கள் தான் ஏற்படும். இதனால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்காது விரைவில் மந்தமாகிவிடும்.
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை ஈர்க்கும் 4 உட்புற தாவரங்கள்
இத்தகைய சூழ்நிலையில் மரங்கள் மற்றும் தாவரங்களின் முக்கியத்துவத்தை குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் விளக்கப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தில் சில தாவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை வீட்டில் வைத்தால் சுத்தமான காற்றை வழங்குவது மட்டுமின்றி, வீட்டிற்கு நேர்மறையான ஆற்றலை அதிகரிக்க செய்யும். அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்தின் படி சில உட்புற தாவரங்களை கணவன் மனைவி தூங்கும் அறையில் வைத்தால் அவர்களுக்கு இடையே பரஸ்பர அன்பு அதிகரிக்கும் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அது என்னென்ன தாவரங்கள் என்று இப்போது இந்த பதிவில் காணலாம்.
லில்லி செடி:
வாஸ்து சாஸ்திரத்தின்படி கணவன் மனைவி தூங்கும் அறையில் இந்த செடி வைப்பது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. இதனால் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதி அதிகரிக்கும். இது தவிர தூக்கமின்மை பிரச்சனையும் நீங்கும்.
மணி பிளாண்ட்:
வாஸ்து சாஸ்திரத்தின் படி, நீங்கள் தூங்கும் படுக்கையறையில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க இந்த செடியை வைக்கலாம். ஆனால் மணி பிளான்ட் நீங்கள் தூங்கும் படிக்கைக்கு அருகிலோ அல்லது பக்கவட்டி மேசையில ஒருபோதும் வைக்கக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அதற்கு பதிலாக ஏதாவது ஒரு மூலையில் வைக்க வேண்டும்.
இதையும் படிங்க: தப்பி தவறிக் கூட பெட்ரூமை 'இந்த' திசையில் கட்டிடாதீங்க அவ்வளவுதானாம்..! பெஸ்ட் திசை எது தெரியுமா..?
பாம்பு செடி:
வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்தச் செடி வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை தரும் சிறந்த தாவரமாக கருதப்படுகிறது. எனவே நீங்கள் தூங்கும் படுக்கையறையின் ஜன்னலுக்கு அருகிலோ அல்லது கதவின் ஓரத்தில் இந்தச் செடியை வைக்கலாம். இது உங்களது அறைக்கு அமைதியான சூழலை உருவாக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது.
இதையும் படிங்க: கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருதா..? இந்த வாஸ்து கோளாறா தான் இருக்கும்.. உடனே சரி பண்ணுங்க!
லாவண்டர் செடி:
கணவன் மனைவி இருவரும் தங்கள் தூங்கும் அறையில் லாவண்டர் செடியை வைக்கலாம் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகிறது. இந்த செடி பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமல்லாமல். அதிலிருந்து வரும் நறுமணம் உங்களது திருமண வாழ்க்கையை அன்பால் நிரப்பும் என்று வாஸ்து கூறுகிறது. எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி, லாவண்டர் செடியை நீங்கள் தூங்கும் படுக்கை அறையில் விளிம்பிலோ அல்லது படுக்கையின் பக்கவாட்டில் மேசையிலோ வைக்கலாம்.