என்னோடு ஓயாமல் உல்லாசமாக இருந்துட்டு.. வேற ஒருத்திய கல்யாணம் பண்ணுவியா.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த செயல்.!
விஜய்(25) என்பவருடன் பிரேமாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
திருமணத்திற்கு இடையூறாக இருந்த கள்ளக்காதலியை இளைஞர் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் பிரேமா(30). திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த விஜய்(25) என்பவருடன் பிரேமாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க;- அந்த இடத்தில் கை வைத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை? பள்ளி தாளாளரை குண்டாசில் குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்.!
இந்நிலையில், விஜய்க்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதை அறிந்த பிரேமா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், என்னை நீ திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நாம் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ, போட்டோஸ் எண்ணிடம் இருக்கிறது. இதை சமூகவலைதளத்தில் பகிர்ந்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதையும் படிங்க;- எவ்வளவு அறிவுரை சொல்லியும் அடங்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கதறிய கணவர்.. கைவிட மறுத்த மனைவி.!
இதனால், ஆத்திரமடைந்த விஜய் பிரேமா வீட்டுக்கு சென்று தகராறு ஈடுபட்டு செல்போனனை பறிந்து தர மறுத்தார். மேலும், பிரேமாவை கடுமையாக தாக்கி மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துள்ளார். உடனே இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.