திருமணம் ஆகி 1 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ள இப்படியா.? தருமபுரியில் ‘பகீர்’ சம்பவம்..

கடந்த வாரம் பாலக்கோட்டில் உள்ள தாய் வீட்டிற்கு மகேஸ்வரியும், கணவரும் வந்துள்ளனர். தொடர்ந்து நேற்று முன்தினம் மகேஸ்வரியின் கணவர் வேலை விஷயமாக சென்னை சென்றுவிட்டு, இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். 

Within a month and a half of marriage in dharmapuril the incident of a newlywed committing suicide has come as a shock

திருமண ஜோடிகள் :

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஜார் தெருவை சேர்ந்த பூங்கொடி - நாகராஜ் என்பவரின் மகள் மகேஸ்வரி (25). இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்த கம்ப்யூட்டர் இஞ்ஜினீயர் அரசகுமார் என்பவருக்கும், கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

Within a month and a half of marriage in dharmapuril the incident of a newlywed committing suicide has come as a shock

இந்நிலையில் கடந்த வாரம் பாலக்கோட்டில் உள்ள தாய் வீட்டிற்கு மகேஸ்வரியும், கணவரும் வந்துள்ளனர். தொடர்ந்து நேற்று முன்தினம் மகேஸ்வரியின் கணவர் வேலை விஷயமாக சென்னை சென்றுவிட்டு, இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவி மகேஸ்வரி தூங்கிய அறையின் கதவை தட்டி, அவரை அரசகுமார் கூப்பிட்டுள்ளார். அப்பொழுது நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்காததால், அச்சமடைந்து கதவை உடைத்து குடும்பத்தினர் பார்த்துள்ளனர். 

புது மணப்பெண் தற்கொலை :

அந்த அறையில் மகேஸ்வரி, தனது துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து தகவலறிந்து வந்த பாலக்கோடு காவல் துறையினர், மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

Within a month and a half of marriage in dharmapuril the incident of a newlywed committing suicide has come as a shock

திருமணமான ஒன்றரை மாதத்தில், புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்டதால், தருமபுரி கோட்டாசியர் சித்ரா விஜயன் சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று விசாரனை நடத்தி வருகிறார். மேலும் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios