மதுரையில் இருக்கும் சீட்டாலாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மனைவி சுபா. ரஞ்சித் குமார் ரியல் எஸ்டேட் தொழில் பார்த்து வந்திருக்கிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனிடையே ரஞ்சித் குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மனைவியை விட்டுப் பிரிந்து விட்ட நிலையில் அந்த பெண்ணுடன் ரஞ்சித்குமார் நெருக்கமாக இருந்து வந்திருக்கிறார். இதனால் சுபா தனது கணவர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதையடுத்து தனது கணவரை அவர் கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார்.

இதற்காக தனது ஆண் நண்பர்கள் சிலருடன் சுபா, ரஞ்சித்குமாரை கொலை செய்வதற்காக சென்றுள்ளார். ரஞ்சித் குமாரை சரமாரியாக வெட்டிய அவர்கள் இரக்கமின்றி அவரது பிறப்புறுப்பை துண்டித்து இருக்கின்றனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்து உள்ளார். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். 

உறவினர்கள் ரஞ்சித்குமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய சுபா மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகிறார்கள்.

கணவரின் பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்த மனைவியால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.