Asianet News TamilAsianet News Tamil

அதிர்ச்சி.. ! அனுமதியின்றி வைக்கப்பட்ட பிள்கஸ் பேனரால் நேர்ந்த சோகம்.. இரண்டு பேர் துடிதுடித்து உயிரிழப்பு..

திருச்சியில் குடியிருப்பு ஒன்றில் சரிந்து விழுந்த பேனரை தூக்கும் போது, பேனரின் இரும்பு கம்பி, மின்சார கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Two people were electrocuted while lifting a collapsed banner
Author
Trichy, First Published May 11, 2022, 11:11 AM IST

திருச்சி அருகே மேனகாநகர் பகுதியிலுள்ள வைரம் அப்பார்ட்மென்ட்ஸ், அதன் உரிமையாளர் அனுமதியின்றி பிரமாண்டமான பிளக்ஸ் பேனர் ஒன்று வைத்திருக்கிறார். 20 வீடுகளைக் கொண்ட இந்த குடியிருப்பில் இன்னும் 4 வீடுகள் மட்டும் விற்பனையாகாமல் இருந்ததால், அதற்காக பேனர் வைத்ததாக கூறப்படுகிறது. இந்த பேனர் அப்பார்ட்மென்ட் வளாகம் முன்பிருந்த டிரான்ஸ்பார்மர் அருகே வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: விதிமுறைகளை மீறிய பாஜக..? மாவட்ட தலைவர் மீது வழக்கு பதிவு...! அதிரடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசு..!

இந்நிலையில் நேற்று பெய்த மழை காரணமாக அந்த பேனர் சரிந்து சாலையில் விழுந்துள்ளது. இதனிடையே, அந்த குடியிருப்பின் காவலாளி செல்லத்துரை என்பவர் அந்த பேரை தூக்குவதற்கு முற்பட்டுள்ளார். அவருடன், அந்த குடியிருப்புக்கு பெயிண்ட் அடிக்க வந்த இரண்டு பேரும் உதவி செய்துள்ளனர். இச்சூழலில் எதிர்பாராதவிதமாக பேனரில் இருந்த இரும்புக் கம்பி, அருகிலிருந்த டிரான்ஸ்பார்மர் மின் கம்பியில் உரசியுள்ளது.  அதில் மூன்று பேர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர்.

Two people were electrocuted while lifting a collapsed banner

இதில் அப்பார்ட்மென்ட் காவலாளி செல்லதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பெயிண்டர் விமல்நாத் என்பவருக்கு மருவத்துமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து கொள்ளிடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அப்பார்ட்மென்ட் உரிமையாளர் அந்த பேனரை அனுமதியின்றி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: சென்னை இரட்டை கொலை வழக்கு.. ஏன் புள்ளையா இப்படி செஞ்சான்? கண்ணீர் விட்டு கதறிய தந்தை..!

Follow Us:
Download App:
  • android
  • ios