வேலைக்கு சென்று கொண்டிருந்த  பெண்ணை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, உடல் முழுக்க கடித்து காயப்படுத்திய சைக்கோ நபரின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை சேந்தவர் ராஜ்குமார். விவசாயம் செய்து வரும் இவர், நேற்று முன்தினம் நாச்சியார்புரம் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பெண் ஒருவர் தோட்ட வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணை  பாலியல் வன்புணர்வு செய்ய திட்டமிட்ட ராஜ்குமார், யாரும் வருகிறார்களா? என நோட்டமிட்டுள்ளார். யாரும் வராததை உறுதி செய்து கொண்ட அந்த சைகோ  பெண்ணை வலுக்கட்டாயமாக காட்டுப் பகுதிக்குள் தூக்கிச் சென்றுள்ளான். 

அப்போது அந்த பெண் கதறி துடித்த போதும் அதனை கண்டுகொள்ளாமல், பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இறுதியில் காம வெறி தலைக்கேற அந்த பெண்ணின் உடல் முழுவதும் காயம் ஏற்படும் அளவுக்கு கடித்து துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து அந்த நபரிடம் இருந்து தப்பி சென்ற அந்த பெண் காவல்நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவங்களை கூறி கதறியுள்ளார்.

இதையடுத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், ராஜ்குமார் மீது கற்பழிப்பு மற்றும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். சைக்கோ தனமாக பெண்ணை கற்பழித்து பெண்ணின் உடல் முழுவதும் கடித்து காயப்படுத்திய சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.