Asianet News TamilAsianet News Tamil

ஆசைவார்த்தை கூறி ஆசை தீர உல்லாசம் அனுபவித்து பெண் கொலை.. நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு

தாழ்த்தப்பட்ட பெண்ணை காதலித்து, கற்பழித்து கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தேனி மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அளித்த  தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Theni court has sentenced a man to life imprisonment for raping and killing a woman
Author
THENI, First Published Jun 10, 2022, 11:20 AM IST

கற்பழித்து கொலை செய்த காதலன்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் லோகிதாசன். (35) இவரும்,அதே பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஜெயப்பிரதா (21)என்ற பெண்ணும் கடந்த 2011ம் ஆண்டு காதலித்து வந்தனர். சுமார் எட்டு மாதங்களாக இருவரும் பல இடங்களில் சுற்றித் திரிந்த நிலையில் லோகிதாசன், ஜெயப்பிரதாவுடன் பல முறை தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.  இதனையடுத்து ஜெயப்பிரதா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லோகிதாசனிடம் தொடர்ந்து பல முறை வற்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் ஜெயப்பிரதாவை ஆண்டிபட்டி காமராஜர் பல்கலைக்கழகம் அருகேயுள்ள ஆண்கள் கழிப்பறைக்கு பின்பகுதிக்கு, இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று அங்கும்  கட்டாயப்படுத்தி உறவு கொண்ட லோகிதாசன், சாதியைக் காரணம் காட்டி, உன்னை திருமணம் செய்ய முடியாது எனக் கூறியதுடன், நீ உயிருடன் இருக்கும் வரை எனக்கு நிம்மதியில்லை என்று கூறி ஜெயப்பிரதா அணிந்திருந்த சேலையாலேயே அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

Theni court has sentenced a man to life imprisonment for raping and killing a woman
 
ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்

இந்த விவகாரம் தொடர்பாக ஆண்டிபட்டி காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யபட்டு,இந்த வழக்கானது தேனி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள,SC-ST சிறப்பு வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணையில் லோகிதாசன் குற்றவாளி என சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் லோகிதாசனுக்கு ஒரு ஆயுள் தண்டனையுடன், பத்தாயிரம் ரூபாய் அபராதமும், அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு கால கடுங்காவல் தண்டனையும் விதித்து தேனி மாவட்ட, SC-ST சிறப்பு வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி செழியன் தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து லோகிதாசன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்..! மனைவியை மீட்டுத் தருமாறு வடிவேலு பட பாணியில் 2 கணவர்களும் போலீசில் கதறல்

Follow Us:
Download App:
  • android
  • ios