சிறுமி குளிக்கும்போது மறைந்து இருந்து ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்து அந்த வீடியோவை காட்டி காட்டி சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருடைய தூரத்து சொந்தமான மோகன்ராஜ் சிறுமிக்கு அண்ணன் முறை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமி குளிக்கும்போது மறைந்து இருந்து ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்து அந்த வீடியோவை காட்டி காட்டி சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்றும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனவும் மிரட்டியுள்ளார்.

மேலும், இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை மோகன்ராஜ் அவரது தந்தை, தாயார் மற்றும் அவரது தம்பி ஆகியோர் சேர்ந்து அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து மனமுடைந்த சிறுமி அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். இந்நிலையில் மயங்கிய நிலையில் இருந்த சிறுமியை அவரது தாயார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் மோகன்ராஜ் என்பவர் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து மற்றும் அவரது தந்தை தனிக்கொடி தாயார் சாந்தி தம்பி பாக்கியராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அனைவரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : ஆப்ரேசன் 2.0 - ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்.! தட்டி தூக்கிய பாஜக.. இலங்கைக்கு அண்ணாமலை ‘திடீர்’ விசிட்!