தம்பி மனைவியை சீண்டிய அண்ணன்.. இணங்க மறுத்த தம்பி மனைவி.. ஓட ஓட விரட்டி செய்த சம்பவம் !
நேற்று மாலையில் அஞ்சலை தனது மகளுடன் ஆடு மேய்ப்பதற்காக பெரியமலையூர் வலசை அடுத்த மலைப்பகுதிக்கு சென்றார். இந்நிலையில் இன்னும் திருமணம் ஆகாத சிவக்குமாரின் அண்ணன் கருப்பையா (30) அங்கு விறகு வெட்ட வந்துள்ளார்.
தம்பி மனைவிக்கு ஆசைப்பட்ட அண்ணன் :
திண்டுக்கல் மாவட்டம், பெரியமலையூர் வலசை பகுதியை சேர்ந்தவர்கள் சிவக்குமார் (26), அஞ்சலை (21) தம்பதி. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு மலர்விழி என்ற 2½ வயது மகள் உள்ளாள். அஞ்சலை தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலையில் அஞ்சலை தனது மகளுடன் ஆடு மேய்ப்பதற்காக பெரியமலையூர் வலசை அடுத்த மலைப்பகுதிக்கு சென்றார்.
இந்நிலையில் இன்னும் திருமணம் ஆகாத சிவக்குமாரின் அண்ணன் கருப்பையா (30) அங்கு விறகு வெட்ட வந்துள்ளார். காட்டுப்பகுதியில் தனது தம்பி மனைவி அஞ்சலை குழந்தையுடன் தனியாக இருப்பதை பார்த்துள்ளார். உடனே அஞ்சலையை தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளார். அதற்கு அஞ்சலை சம்மதிக்காமல் கருப்பையாவிடம் இருந்து தப்பி ஓட முயன்றார்.
தீ வைத்து எரித்து கொலை :
இதில் ஆத்திரமடைந்த கருப்பையா தான் வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். படுகாயமடைந்த அஞ்சலை ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதற்கிடையே அஞ்சலையை உயிருடன் விட்டால் குடும்பத்தினரிடம் தன்னை காட்டிக்கொடுத்துவிடுவார் என்று பயந்த கருப்பையா, கர்ப்பிணி என்றும் பாராமல் அஞ்சலை, 2½ வயது பெண் குழந்தை ஆகியோரை தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச்சென்றார்.
சிறிது நேரத்தில் தாயும், மகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்ததும் நத்தம் போலீசார் விரைந்து சென்று தாய், மகளின் உடல்களை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கருப்பையாவை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.