சென்னை காட்டாங்கொளத்தூரில்  கல்லூரி இயங்கிவருகிறது. இந்த கல்லூரியில் இருபாலருக்கும் தனித்தனி விடுதிகள் இயங்கி வருகின்றன.  அங்கு  நேற்று  மதியம் 3 மணியளவில் மாவு ஒருவர் விடுதியிலுள்ள தன்னுடைய அறைக்குச் செல்வதற்காக லிப்டில் ஏறினார். அப்போது, அங்கு கல்லூரி கேன்டீனில் பணியாற்றும் ஊழியர் அர்ஜுனும் லிப்டில் ஏறினார். இருவர் மட்டுமே இருக்கும் இடத்தில் லிப்டில் யாரும் இல்லாத நேரத்தில் அர்ஜுன் தனது ஆடையை களைந்து மாணவி முன்பு  சுய இன்பம் செய்துள்ளார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, கூச்சலிட்டுள்ளார். 

அங்கிருந்து தப்பிக்க முயன்ற வித்யாவை, அந்த ஊழியர் தடுத்து நிறுத்தியுள்ளார். இதற்கிடையில், 4ஆவது மாடியில் லிப்ட் நின்றதும் சத்தம் போட்டுக்கொண்டே வித்யா வெளியே ஓடி வந்துள்ளார்.அச்சமடைந்த அர்ஜுன்  தப்பியோடிவிட்டார். இதுகுறித்து விடுதி வார்டனிடம் அந்த மாணவி புகார் கொடுத்தார். அதற்கு வார்டனோ முதலில் போய் உன்னுடைய ஆடையை மாற்றிக்கொண்டு தூங்கச் செல்; உன்னுடைய ஆடைதான் இதற்கு காரணம்” அந்த ஊழியர் அப்படி நடந்து கொண்டதாக அதிர்ச்சி அளிக்கும் பதிலை தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற பாலியல் தொல்லைகள் வடஇந்திய மாணவிகளுக்கு மட்டுமே நடக்கிறது என்றும் வார்டன் தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் நேற்று மாலை 3 மணிக்கு நடந்தது. தகவலறிந்த மாணவர்கள் இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற பாலியல் தொல்லைகள் வடஇந்திய மாணவிகளுக்கு மட்டுமே நடக்கிறது என்றும் வார்டன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை 3 மணிக்கு நடந்தது. தகவலறிந்த மாணவர்கள் இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். சிசிடிவி காட்சிகள் மூலம் அந்த மாணவி, அந்த ஊழியரை அடையாளம் காட்டினார்.