Asianet News TamilAsianet News Tamil

ஷாக்.. மூட்டை மூட்டையாக அள்ளி கொள்ளை.. கட்டுகட்டாக கரன்சி நோட்டுக்கள்..சிக்கியது எல்லாம் கருப்பு பணமா..?

திருப்பூரில் தொழிலதிபர் வீட்டில் திருடிய வழக்கில் கைதான கட்டிட தொழிலாளர் 4 பேரிடம் நடத்திய விசாரணையில், கணக்கில் காட்டமால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 2 கோடி பணம் மூட்டை மூட்டையாக கட்டி கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 

Shocking information released during the investigation - Tiruppur robbery case
Author
Tamilnádu, First Published Apr 27, 2022, 12:14 PM IST

திருப்பூர் குள்ளேகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த 73 வயதான துரைசாமி என்பவர் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவன வளாகத்திலேயே வீடும் உள்ளது. இவரது மூன்று மகள்களுக்கு திருமணமாகி, வீட்டில் துரைசாமி, அவரது மனைவி தனலட்சுமி மட்டும் வசித்து வந்துள்ளனர்.

மேலும் இந்த வீட்டுக்கு எதிரே, துரைசாமிக்கு சொந்தமான பழைய வீடும் ஒன்று உள்ளது. அது பயன்படுத்தபடாமல் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி துரைசாமி,திருப்பூர் சென்ட்ரல் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.அதில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி தனது பழைய வீட்டில், 2 சவரன் நகை, 1.50 லட்சம் ரூபாய் மற்றும் பத்திர ஜெராக்ஸ் ஆகியன திருட்டு போனதாக சொல்லப்பட்டிருந்தது.இதனை தொடர்ந்து திருட்டு வழக்கு தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சதீஷ்,  அவரது தம்பி சக்தி, தாமோதரன், ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் போலீசார் தங்கள் பாணில் நடத்திய விசாரணையில், துரைசாமி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை, மூட்டையில் கட்டி மூன்று முறை கொள்ளையடித்தை அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் இந்த திருட்டு வழக்கு விசாரணையை வேறு திசைக்கு மாற்றியுள்ளது. 

Shocking information released during the investigation - Tiruppur robbery case

இதனையடுத்து புகார் கொடுத்த துரைசாமியிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தனர். இதுக்குறித்து காவல்துறை தப்பில், கடந்த 2020 நவம்பர் மாதத்தில், கைதான நான்கு பேரும் துரைசாமியின் பழைய வீட்டில் காம்பவுண்ட் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது தான் அந்த வீட்டின் உள்ள ஒரு அறையில், பணம் கட்டுக்கட்டாக வெள்ளை துணிப்பையில் மூட்டையில் கட்டி வைக்கப்படிருப்பதை பார்த்துள்ளனர். இதையறிந்த கொள்ளையர்கள், அந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டம் வகுத்துள்ளனர்.  அது போல் மூன்று முறை கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை மூட்டையாக கட்டி, கொள்ளையடித்து சென்றுள்ளனர். இவ்வாறு, ஏறத்தாழ 2 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிகிறது என்று கூறினர். 

Shocking information released during the investigation - Tiruppur robbery case

கொள்ளையடித்த பணத்தில், கடந்த மூன்று மாதங்களாக திருப்பூர், திருவண்ணாமலை என்று ஊர் ஊராக சுற்றி ஜாலியாக செலவு செய்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சகோதரர்கள் சதீஷ், சக்தி ஆகியோர் திருவண்ணாமலையில், புதிய கார், புல்லட் வாங்கி வலம் வந்துள்ளார்.  கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் நான்கு பேரும், வீரபாண்டி, கணபதிபாளையம், மங்கலம் ரோடு ஆகிய இடங்களில் ஆளுக்கொரு வீடுகளை, இரண்டு மாதம் முன் கிரயம் செய்துள்ளனர். அதன்பின் தங்க நகைகள், சொகுசு கார், பைக், புல்லட் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். 

Shocking information released during the investigation - Tiruppur robbery case

இந்நிலையில் தான் கட்டட தொழிலாளர்கள் திடீரென சொகுசு வாழ்க்கை வாழ்வது குறித்து திருவண்ணாமலை போலீசாருக்கு சந்தேக ஏற்பட்டு ரகசியமாக விசாரித்து வந்துள்ளனர். இதற்கிடையில் திருப்பூரில் கொள்ளை வழக்கு பதியப்படபே, அந்த போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே, திருவண்ணாமலைக்கு விரைந்த போலீசார், சதீஷ், சக்தியை திருப்பூருக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இருவரும் கொடுத்த தகவலின்படி, தாமோதரன், ராதாகிருஷ்ணன் என மற்ற இருவரையும் திருப்பூரில் வைத்து பிடித்தனர்.விசாரணைக்கு பின் நால்வரும் கைது செய்யப்பட்டு, 30 சவரன் நகை, 16 லட்சம் ரூபாய், இரண்டு கார், இரண்டு டூவீலர், நான்கு வீட்டின் பத்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.இது கணக்கில் காட்டாத பணம் என்பதால், இது குறித்து வருமான வரித்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios