புதுக்கோட்டை நகர காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றுபவர் குமாரவேல். இவரது மனைவி ரேவதி நகராட்சியில் பணிபுரிகிறார். இவர்களது மகன் மணி, திமுக எம்எல்ஏ ரகுபதி குடும்பத்தினர் நடத்தும் ஜேஜே கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு படித்து வருகிறார்.


 
இன்று காலை புதுக்கோட்டை பூசத்துறை வெள்ளாற்று ரயில்வே பாலத்தில் சக மாணவர்களோடு பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்துள்ளார். அப்போது மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் கொளத்தூரைச் சேர்ந்த மகேந்திரன் ஆகியோர் தண்டவாளத்தில் நின்று பேஸஞ்சர் ரயில் வருவதுடன் செல்ஃபி எடுத்துள்ளனர்.
 
அப்போது அதிவேகத்தில் வந்த ரயில் மோதி மணிகண்டன் மற்றும் மகேந்திரன் ஆகியோர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டனர். சக நண்பர்கள் அவர்களை மீட்டு  புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 

தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது நண்பர் மகேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.