Asianet News TamilAsianet News Tamil

தம்பி மகளை குடோனுக்குள் அழைத்து சென்று நாசம் செய்ததால் கர்ப்பம்.. பெரியப்பாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த கோர்ட்.!

2019-ம் ஆண்டு மாணவி பிளஸ்-1 படித்தபோது, பள்ளியில் கல்தடுக்கி விழுந்ததில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தபோது, அவர் கர்ப்பமாக இருந்ததும், அவர் கீழே விழுந்ததில் கரு கலைந்ததும் தெரியவந்தது. 

School Girl Rape.. Life sentence for Periyappa in trichy Court
Author
Trichy, First Published Apr 9, 2022, 12:07 PM IST

பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய பெரியப்பாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மிரட்டி பலாத்காரம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி தாலுகாவை சேர்ந்தவர் சின்னப்பன்(59). விவசாயி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு தனது தம்பி மகளை நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க வருமாறு தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதுபற்றி யாரிடமாவது கூறினால் அவரையும், அவருடைய பெற்றோரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். அதன்பின் பல முறை அவரை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

School Girl Rape.. Life sentence for Periyappa in trichy Court

மாணவி கர்ப்பம்

இந்நிலையில், 2019-ம் ஆண்டு மாணவி பிளஸ்-1 படித்தபோது, பள்ளியில் கல்தடுக்கி விழுந்ததில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தபோது, அவர் கர்ப்பமாக இருந்ததும், அவர் கீழே விழுந்ததில் கரு கலைந்ததும் தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்த போது நடந்தவற்றை கூறி மாணவி  கதறி அழுதுள்ளார். 

School Girl Rape.. Life sentence for Periyappa in trichy Court

பரபரப்பு தீர்ப்பு

இதுகுறித்து மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சின்னப்பனை கைது செய்தனர்.  இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில்  தீர்ப்பு  வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட சின்னப்பனுக்கு மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஆயுள்தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 1 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios