திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கிராமத்தில் 35 வயது பெண் ஒருவருக்கு 2  மகள்களில், மூத்த மகள் 7ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியில் வசித்து வந்த நவரசன் (25). கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி அந்த பெண்ணின் மூத்த மகளை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி வீட்டிற்கு அனுப்பியுள்ளார். 

பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி நவரசனுக்கு 70 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.40,000 அபராதமும் விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மிரட்டி பலாத்காரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கிராமத்தில் 35 வயது பெண் ஒருவருக்கு 2 மகள்களில், மூத்த மகள் 7ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியில் வசித்து வந்த நவரசன் (25). கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி அந்த பெண்ணின் மூத்த மகளை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி வீட்டிற்கு அனுப்பியுள்ளார். 

கைது

இந்த சம்பவத்திற்கு பிறகு சிறுமி மிகவும் சோர்வாக காணப்பட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த தாய் விசாரித்த போது தனக்கு நடந்ததை கதறியபடி கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாய் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நவரசன் (25) என்பவரை கைது செய்தனர். 

 70 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கின் விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஏப்ரல் 18-ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து, திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுகந்தி குற்றவாளி நவரசனுக்கு சட்ட பிரிவிற்கு 5 பிரிவுகளின் கீழ் 70 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க;- உன்மேல அவருக்கு ரொம்ப ஆசை.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோமோ.. கள்ளக்காதலனுக்கு மகளை விருந்தாக்கிய தாய்.!