Asianet News TamilAsianet News Tamil

ரீல் புஷ்பாவை மிஞ்சிய தமிழகத்தில் ரியல் புஷ்பா.. அரசுப் பேருந்தை வாடகைக்கு எடுத்து செம்மரக் கடத்தல்..!

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதி சேஷாச்சலம் வனப்பகுதியில் விலை உயர்ந்த செம்மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால், இவற்றை வெட்டி கடத்தும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், திருப்பதி சுற்றுப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் செம்மரங்களை  வெட்டி கடத்தலுக்கு அனுப்பி விட்டு, திருப்பத்தூர் நோக்கி தமிழக அரசு பேருந்தில் தமிழக கூலி தொழிலாளர்கள் 36 பேருடன் வந்துக்கொண்டிருந்தது.  

sandalwood smuggling gang in tamilnadu government bus
Author
Tirupati, First Published Feb 12, 2022, 12:19 PM IST

புஷ்ப திரைப்படம் வருவதற்கு முன்னதாகவே சேஷாச்சலம் வனப்பகுதியில் பல்வேறு செம்மரக்கடத்தல் சம்பவம் நடத்திருந்தாலும் தமிழ்நாடு அரசு பேருந்தை வாடகைக்கு அமர்த்தி செம்மரம் வெட்ட சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதி சேஷாச்சலம் வனப்பகுதியில் விலை உயர்ந்த செம்மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால், இவற்றை வெட்டி கடத்தும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், திருப்பதி சுற்றுப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் செம்மரங்களை  வெட்டி கடத்தலுக்கு அனுப்பி விட்டு, திருப்பத்தூர் நோக்கி தமிழக அரசு பேருந்தில் தமிழக கூலி தொழிலாளர்கள் 36 பேருடன் வந்துக்கொண்டிருந்தது.  

sandalwood smuggling gang in tamilnadu government bus

பைபாஸ் சாலையில் அந்த பேருந்தை  சந்திரகிரி போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது, தாங்கள் திருமண கோஷ்டி என்றும், திருப்பதியில் திருமணம் முடிந்து ஊருக்கு திரும்பி செல்வதாகவும் கூறியுள்ளனர். ஆனால், திருமண ஜோடியை பேருந்துக்குள் காணவில்லை. மணமக்கள் வேறு வாகனத்தில் வருவதாகவும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பேருந்தில் இருந்து இறக்க சொன்னதும் அந்த இருந்த 36 பேரும் திடீரென்று பேருந்தில் இருந்து வாசல் வழியாவும், ஜன்னல் வழியாகவும் தப்பிச்சென்று அருகில் இருந்த காட்டுப்பகுதிக்குள் ஓடியோடி விட்டனர். 

sandalwood smuggling gang in tamilnadu government bus

இதையடுத்து, அந்த அரசு பேருந்தை போலீசார் பறிமுதல் செய்து, சந்திரகிரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு, நடத்துனர், ஓட்டநரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவர்கள் அனைவரும் செம்மரம் வெட்டும் தொழிலாளர்கள் என்பதும், செம்மரத்தை வெட்டி கொடுத்துவிட்டு சந்தேகத்திற்கு இடமின்றி  திருமணத்துக்கு செல்பவர்கள் போல் பளபளப்பான ஆடைகளை அணிந்து கொண்டு அரசு பேருந்தை வாடகைக்கு அமர்த்தியதும் தெரியவந்தது.   இந்தக் கும்பலை யார் பணிக்கு அனுப்பியது, செம்மரம் எங்கே வெட்டப்பட்டது என்பது குறித்து விவரங்களை தெரிந்துகொள்வதற்காக தப்பியோடியவர்களை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios