Asianet News TamilAsianet News Tamil

"குடும்பத்தோடு காலி செய்து விடுவேன்".. அசிங்க அசிங்கமாக பேசி போலீசை மிரட்டிய ரவுடியின் நிலைமையை பார்த்தீங்களா

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் அர்ஜூனன் என்பவர் கடந்த 19ம் தேதி வழக்கு விசாரணைக்காக புத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரை தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்போது செந்தில் தான் மிகப்பெரிய ரவுடி என்றும் போலீசாரை மிரட்டிய ஆடியோ வெளியாகியுள்ளது. 

Rowdy arrested for intimidating police inspector
Author
Mayiladuthurai, First Published Mar 22, 2022, 11:08 AM IST

சீர்காழியில் விசாரணைக்கு அழைத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

ஆடியோ வைரல்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் அர்ஜூனன் என்பவர் கடந்த 19ம் தேதி வழக்கு விசாரணைக்காக புத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரை தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்போது செந்தில் தான் மிகப்பெரிய ரவுடி என்றும் போலீசாரை மிரட்டிய ஆடியோ வெளியானது. 

போலீசுக்கு மிரட்டல்

அந்த நபர் போனில் மிரட்டுகையில் ``அய்யா எத்தனை புள்ளைங்க இருக்கு, உனக்கு தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்காதீங்க, நாங்கள் யார் என்று உங்களுக்கு தெரியாது. பூச்சாண்டி வேலை காட்டாதே. நீயே இருக்க மாட்ட... சாவடிச்சிடுவேன். நீ யாருகிட்ட மோதுர, அவன் நம்பர் கொடுத்தா என்கிட்ட பேசுவியா. உனக்கு பொண்டாட்டி புள்ள இருக்கா பாத்துக்கோ.

நான் யார் எங்க டீம் உனக்கு தெரியாது, பார்த்து இருந்துக்கோ... இரண்டு நாட்களில் நீ இருக்க மாட்ட, அவன் ஒரு ஆளு, அவன் சொன்னான்னு என் கிட்ட பேசுற அவன் ஊர்ல புகுந்து ரகளை பண்றான். அவன கேட்க துப்பு இல்ல. நான் பேசுறத வேண்டுமானால் ரெக்கார்ட் பண்ணிக்கோ. நீ யாரு என்ன என்று உன் அட்ரஸ் எடுத்தாச்சு. என்ன வேண்டுமானாலும் பண்ணிக்க. ஆனா நீ இருக்க மாட்ட. உன்ன மாதிரி குழந்தைகளை நிறைய பார்த்தாச்சு’’ என பேசியிருந்தார். 

ரவுடி செந்தில் கைது 

இதனையடுத்து ரவுடி செந்தில் மீது காவல் ஆய்வாளர் அர்ஜுனன் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடி தலைமறைவான ரவுடி செந்திலை பிடிக்க தனிப்பமை அமைக்கப்பட்டது. இந்நிலையில், பேருந்து நிலையத்தில் சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். காவல் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்தது, ஆபாசமாக பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் செந்தில் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios