பாமக நகர செயலாளர் வெட்டி கொலை...!

https://static.asianetnews.com/images/authors/5375b41b-c303-5568-beda-e699e57b9beb.jpg
First Published 6, Feb 2019, 5:58 PM IST
religious conversion...PMK secretary killed
Highlights

கும்பகோணம் அருகே பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருபுவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் அருகே பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருபுவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். கேட்டரிங் ஏஜென்ட்டாக வேலை செய்து வந்தாலும், இவர் பாமகவில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். திருப்புவனத்தின் சில பகுதகளில் முஸ்லிம்கள், அங்குள்ள ஹிந்துக்களை மதம் மாற்றம் முயற்சில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

முஸ்லிம் மதமாற்ற முயற்சிக்கு ராமலிங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. ஹிந்துக்கள் ஒருபோதும் இஸ்லாமிய மதத்திற்கு மாறாமாட்டார்கள். மத மாற்றம் செய்வதை கைவிடுங்கள் குரலை உயர்த்தி பேசினார். உங்களுடன் பள்ளிவாசலுக்கு வந்து, தொழுகையில் ஈடுபட நான் தயார்; நீங்கள் ஹிந்துக் கடவுளை ஏற்பீர்களா? பல்வேறு கேள்வி எழுப்பினார். 

அங்குள்ள முஸ்லிம் ஒருவரின் குல்லாவை எடுத்து, தன் தலையில் அணிந்து கொண்டு, அவரின் நெற்றியில் விபூதியை பூசி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த முஸ்லிம் மதத்தினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். 

ராமலிங்கம் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் காரிலிருந்து இறங்கிவந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதமாற்றத்தை தட்டிக்கேட்டதால் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி கும்பகோணத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவத்திற்கு பா.ம.க., மற்றும் ஹிந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

loader