கோவை மாவட்டம் சரவணம்பட்டி அடுத்த கரட்டுமேடு பகுதியில், மாநகராட்சி ஆரம்ப பள்ளி செயல் பட்டு வருகிறது.  அந்த பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அதே பள்ளியில், லட்சுமணன் மூர்த்தியின் மகள் நான்காம் வகுப்பும், அவரது மகன் மூன்றாம் வகுப்பும், இன்னொரு மகள் நான்காம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியை ஜெயந்தி என்பவர் நான்காம் வகுப்பு படிக்கும் மகள் மகளை பிரம்பால் அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்த மாணவியின் ஜாதி பெயரை சொல்லியும், கொழா சண்டையில் லோக்கல் பெண்கள் அசிங்க அசிங்கமாக காதில் கேட்கமுடியாத நாக்கு கூசும் வார்த்தைகளால்  திட்டுவதைப்போல திட்டித் தீர்த்துள்ளார்.

தலைமை ஆசிரியை அடித்ததில் சிறுமிக்கு கை கால்கள், தொடை, முதுகில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பின் பிரம்பால் அடித்த தழும்பும் ஏற்பட்டுள்ளது. பள்ளி முடிந்து வீடு சென்ற மாணவி அழுதுகொண்டே தலைமையாசிரியை தன்னை அடித்தது பற்றியும், அசிங்க அசிங்கமாக திட்டியதைப் பற்றியும் ஜாதி பெயரை சொல்லி கேவலமாக பேசியதையும் தனது அப்பா அம்மாவிடம் கதறி அழுதுள்ளார்.

இதனால் மனமுடைந்து போன அந்த சிறுமியின் பெற்றோர், அந்த பள்ளியில் படிக்கும் மற்ற குழந்தைகளின் பெற்றோர்களை சேர்த்துக்கொண்டு அந்த பள்ளி முன்பு கூடி முற்றுகையிட்டனர். அப்போது, அந்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். 

இது பற்றி பேசிய ஒரு பெண்மணி பேசுகையில்; குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியை, இப்படி நடந்து கொள்வது? சனியன்... நாயே... பேயே... மூதேவி... என திட்டுவது மட்டுமல்லாமல் ஜாதிப் பெயரைச் சொல்லியும் பேசுவதுதான் ஒரு ஆசிரியைக்கு அழகா? என கேட்டுள்ளார்.

இது புதுசு இல்ல, நாங்கள் ஏற்கனவே இதுபற்றி அந்த தலைமை ஆசிரியையிடம் வந்து கேட்டதற்கு நீங்க எங்க வேணா போய் சொல்லிக் கோங்க, எனக்கெல்லாம் அதைப் பற்றி பயமே கிடையாது என ஆணவமாக பேசுகிறார். இந்த தலைமை ஆசிரியைக்கு பயந்தே பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சரவணம்பட்டியில் உள்ள வேறு ஒரு பள்ளியில் கொண்டு போய் சேர்கிறார்கள். 

இதைவிட ஒரு கொடுமை என்னவென்றால்? என் பெண்ணுக்கு வயசு பத்துதான் ஆகிறது. ஒருநாள் பழைய சாதம் சாப்பிட்டு விட்டு சென்றால், அவளுக்கு அந்த சாப்பாடு ஒத்து வராமல் போனதால் வாந்தி எடுத்துள்ளார். ஆனால், அந்த ஆசிரியை என்ன கர்ப்பமா இருக்கியா? எத்தன மாசம்? அப்படின்னு அசிங்கமாக கேட்டுருக்காங்க, ஒரு குழந்தை கிட்ட ஒரு ஆசிரியை பேசுற பேச்சா இது? நாங்க பொய் சொல்வதாக கூட நீங்கள் நினைக்கலாம் ஆனால், அந்த ஆசிரியை பேசுற ஆடியோ ஆதாரங்கள் இருக்கு என அந்தப் பெண்மணி கூறியுள்ளார்.