Asianet News TamilAsianet News Tamil

3 மாதத்தில் ரூ.11 கோடி வரை ஆன்லைன் கடன் மோசடி.. செக் வைத்த சைபர் கிரைம்.. அதிர வைக்கும் பின்னணி.!

ஸ்பீட் லோன் ஆப் மூலம் பெற்ற கடனை இன்னமும் செலுத்தவில்லை என்றும் உடனடியாக ரூ. 8400 செலுத்தவில்லை என்றால் உங்களது போட்டோவை நிர்வாணமாக மார்பிங் செய்து அதனை, உங்கள் தொலைபேசியில் உள்ள அனைத்து தொடர்பு எண்களுக்கும் ஷேர் செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

Online Loan App fraud .. Cybercrime with checks .. Shocking background
Author
Tamil Nadu, First Published Jun 8, 2022, 12:58 PM IST

ஆன்லைன் கடன் மோசடி புகாரில் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில் மூன்று மாதத்தில் 11 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனையும் மோசடியும் செய்ததாக புனேயைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பலை தேனி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (35) என்பவர் தேனியில் புத்தகக்கடை நடத்தி வருகிறார். கடந்த வருடம் கொரோனா காலகட்டத்தில் பணத்தேவைக்காக பேஸ்புக்கை பார்த்து ஸ்பீட் லோன்  என்ற mutant Moniey hendering App பதிவிறக்கம் செய்து அதன்மூமை ரூ.6000 வாங்கி அதனை கெடு காலத்திற்குள் திருப்பி செலுத்தியுள்ளார். பின்பு 15.05.22 அன்று நீங்கள் ஸ்பீட் லோன் ஆப் மூலம் பெற்ற கடனை இன்னமும் செலுத்தவில்லை என்றும் உடனடியாக ரூ. 8400 செலுத்தவில்லை என்றால் உங்களது போட்டோவை நிர்வாணமாக மார்பிங் செய்து அதனை, உங்கள் தொலைபேசியில் உள்ள அனைத்து தொடர்பு எண்களுக்கும் ஷேர் செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

Online Loan App fraud .. Cybercrime with checks .. Shocking background

அதற்கு அஞ்சிய ராஜேஷ் குமார் கடந்த 2022 பிப்ரவரி 15ம் தேதி மீண்டும் ரூ.8,400-ஐ அவர்கள் தெரிவித்த யூபிஐ-ஐடியில் செலுத்தியுள்ளார். ஆனால், அந்த கணக்கில் பணம் வரவில்லை எனக் கூறி அந்த நிறுவனம் ராஜேஷ்குமாரை மிரட்டி பல தவணையாக பலமுறை பணத்தை வசூலித்துள்ளது. இதனால் விரக்தியடைந்த ராஜேஷ்குமார், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் விசாரணையை துவக்கிய தேனி சைபர் கிரைம் போலீசார், அந்த குறிப்பிட்ட சமூக வலைத்தளம் மூலம் கடன் வழங்கும் நிறுவனத்தின் யூபிஐ ஐடியை பரிசோதனை செய்தனர். அந்த கணக்கில் 7 வங்கிக் கணக்குகள் இணைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவற்றில் ஆறு கணக்குகள் நிறுவனத்தின் பெயரிலும், ஒரு கணக்கு மட்டும் தனிநபர் பெயரிலும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த தனிநபரின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில் கடந்த 2022 மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாத காலத்தில் மட்டும் 11 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிப் பரிவர்த்தனைகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பொது மக்களிடம் இருந்து ஏமாற்றி மோசடி செய்த பணம் என்பதும் தெரியவந்துள்ளது.

Online Loan App fraud .. Cybercrime with checks .. Shocking background

இதைத் தொடர்ந்து அந்த தனிநபர், மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த சாகர் அங்கூஸ் ஜோர்கி (35) எனத் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, புனேவிற்கு தேனி சைபர் க்ரைம் போலீசார் விரைந்தனர். சம்பந்தப்பட்ட தனிநபரை விசாரணை செய்ததில் அவர் புனேயில் உள்ள ஒரு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி எனவும், கடந்த சில தினங்களுக்கு முன் புனேப் பகுதியைச் சேர்ந்த பிரபுல் (35) என்பவர் தனக்கு கடன் வாங்கி தருவதாகக் கூறி தனது ஆதார் மற்றும் புகைப்படங்களை வாங்கிக் கொண்டதாகவும் அதற்கு பின் தனக்கு ஏதும் தெரியாது எனக் கூறியுள்ளார்.

Online Loan App fraud .. Cybercrime with checks .. Shocking background

அதனைத் தொடர்ந்து, மற்றொரு இடத்தில் இருந்த பிரபுல் என்பவரை சுற்றி வளைத்ததில், அவருடன் மஹரந்த், ராஜேந்தர் மற்றும் தயானேஷ்வர் ஆகிய 3 பேரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 10-க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள், இரண்டு கம்ப்யூட்டர், ஸ்கேனர், பிரிண்டர், ஏடிஎம் மற்றும் சிம் கார்டுகள், கடன் வழங்கும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 4 பேரும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் க்ரைம் பிரிவிற்கு கொண்டு வரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த மோசடியில் மேலும் பலர் ஈடுபட்டிருக்கக்கூடும், பல கோடி ரூபாய் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாக சைபர் க்ரைம் போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios