Asianet News TamilAsianet News Tamil

ஒத்த வீடு... நிர்வாண கோலத்தில் அந்த மாணவி...!! இரவு முழுக்க நடந்த பயங்கர சம்பவம்..!!

நள்ளிரவு ஆகியும் அவள் வரவே இல்லை... இதில் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழக்கத் தொடங்கிய பெற்றோர்கள் இனி தனியாகதேடி பிரயோஜனம் இல்லை என போலீசாரின் உதவியை நாடினர். அவர்களும் அவளைத்  தேட களத்தில் இறங்கினர்.  அன்று  இரவு முழுக்க பல இடங்களில் ஜாஸ்மினை தேடினர் ஆனாலும் அவளை கண்டுபிடிக்கவே  முடியவில்லை... 

one school girl raped murdered at nellai police enquiry going on
Author
Nellai, First Published Oct 18, 2019, 9:22 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பள்ளிக்கூடம் சென்ற மாணவி நிர்வாண நிலையில் மர்ம்மான முறையில் சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

one school girl raped murdered at nellai police enquiry going on

நெல்லை மாவட்டம் உவரி அடுத்த கூட்டப்பனை கிராமத்தை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் அவரது மனைவி   வினிட்டா, இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் கழிந்துவிட்டது. அதுவரை மகிழ்ச்சியாகவே சென்ற இவர்களின் வாழ்க்கையில் இடியாக வந்திறங்கியது அந்த சோகச் செய்தி. பள்ளிக்கு சென்ற மகள் வீடு திரும்பவில்லை என்பதுதான் அது... ஆம் இவர்கள் ஆசையாக பெற்றெடுத்த ஒரே மகள், அன்பு மகள் ஜாஸ்மின், (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதே பகுதியில் உள்ள  அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தாள்,  நேற்று முன்தினம் பள்ளிக்கூடம்  சென்றவள் மாலைநேரம் அகியும் வீடு திரும்பவில்லை,  மகள் வீட்டுக்கு வராததை அடுத்து  அவரது பெற்றோர்கள் பள்ளிக்கூடம்  சென்று அவளை தேடினார். "அவள் அப்போதே பள்ளிக்கூடம் முடிந்து, வீட்டுக்கு சென்றுவிட்டாலே".! என்று அங்கிருந்தவர்கள் கூறியது பெற்றோர்களுக்குகிலியைஏற்படுத்தியது.

one school girl raped murdered at nellai police enquiry going on

தன்னுடன் படிக்கும் தோழிகள் யாருடனாவது அவள் சென்றாளா.? என்ற சந்தேகத்தில்  அவளுடன் படிக்கும் சக மாணவிகளின் வீட்டுக்கு சென்று ஜேஸ்மினை விசாரித்தனர்.  ஆனால், அங்கேயும்,  "அவள் பள்ளி முடிந்து வீட்டுக்கு தான் சென்றாள், நாங்கள் யாரும் அவளை பார்க்கவில்லை"  என்று அவர்கள் தெரிவித்தனர். இதில் அவர்களுக்கு அச்சம் அதிகமானது, இதில் நேரம் ஆக ஆக பெற்றோர்களுக்கு அவள் குறித்து பதற்றம் அதிகமானது. மகளுக்கு என்ன ஆனதோ ஏது ஆனாதோ என்ற பீதியில் கதறி துடித்தனர். நள்ளிரவு ஆகியும் அவள் வரவே இல்லை... இதில் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழக்கத் தொடங்கிய பெற்றோர்கள் இனி தனியாகதேடி பிரயோஜனம் இல்லை என போலீசாரின் உதவியை நாடினர். அவர்களும் அவளைத்  தேட களத்தில் இறங்கினர்.  அன்று  இரவு முழுக்க பல இடங்களில் ஜாஸ்மினை தேடினர் ஆனாலும் அவளை கண்டுபிடிக்கவே  முடியவில்லை... இரவு முழுவதும் வெவ்வொரு நொடியும் பதற்றமாகவே கடந்தது, ஒருவழியாக பொழுது விடிந்தது.

 

one school girl raped murdered at nellai police enquiry going on

பொழுது விடிந்தால் மகள் வீட்டிற்கு வந்து விடுவாள் என்ற நம்பிக்கையில் இருந்த பெற்றோர்களுக்கு அந்த பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது, ஆம்... மறுநாள் காலை  தங்கள் வீட்டுக்கு பின்புறம் கொஞ்சம் தூரத்தில்  தனியாக உள்ள அந்த பாழடைந்த வீட்டை திறந்து பார்த்தபோது, அங்கிருந்த காட்சி அவர்களை நிலையை குலைய செய்துவிட்டது. தாங்கள் ஆசையாசையாக பொத்திப் பொத்தி வளர்த்த அன்புமகள் ஜேஸ்மின், அரை நிர்வாண கோலத்தில் தலைவிரி கோலமாக சடலமாக கிடந்தாள்.  தன் மகளின் நிலையை கண்டு அவர்கள் கேவிக், கேவி அழுதனர். அது அங்கிருந்தவர்கள் நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது. பிறகு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜேஸ்மின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அவள் அரை நிர்வாணத்துடன் இருந்ததால் அவள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில்  விசாரித்து வருகின்றனர். மேலும் அதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த இருவரை  பிடித்து  விசாரிக்கின்றனர். பள்ளிக்கு சென்ற மாணவி பாழடைந்த கட்டிடத்தில் அரை நிர்வாணத்துடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நெல்லையில்  அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios