நடிகர் சிம்புவின் கார் முதியவர் ஒருவர் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 70 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிம்பு கார் மோதி விபத்து

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திரைப்பட உலகில் முன்னனி நடிகராக இருப்பவர் சிலம்பரசன், இவர் நடித்த மாநாடு திரைப்படம் நீண்ட நாளுக்கு பிறகு திரையரங்கில் ஓடி வெற்றி பெற்றது. இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் சிம்புவிற்கும் கம்பேக் கொடுத்தது. தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்திலும் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இந்த நிலையில் தேனாம்பேட்டை இளங்கோ சாலை அருகே கார் ஒன்று சென்றுள்ளது. அப்போது மாற்றுதிறனாளி முதியவர் ஒருவர் தவழ்ந்து சாலையை கடக்க முயன்றுள்ளார். இதனை கவனிக்காத கார் ஓட்டுநர் முதியவர் முனுசாமி மீது மோதியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துள்ளார்.

கார் ஓட்டுநர் செல்வம் கைது

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டர். அப்போது அந்த கார் நடிகர் சிலம்பரசனுக்கு சொந்தமான கார் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரை ஓட்டிவந்த செல்வம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காரில் டி.ராஜேந்திரன் பயணம் ?

இந்த விபத்து நடைபெற்ற சம்பவத்தின் போது காரில் நடிகர் சிலம்பரசனின் தந்தை டி.ராஜேந்திரன் பயணித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருந்து போதும் விபத்திற்கும் டி.ராஜேந்திரனுக்கும் எந்த தொடர்பும் இல்லையென்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.