பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஓட ஓட விரட்டி படுகொலை..!

நெல்லை கோடீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஸர் முகமது (35). இவர் சூப்பர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருகிறார். 

nellai Real estate businessman murder tvk

நெல்லையில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை கோடீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஸர் முகமது (35). இவர் சூப்பர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன. இவருக்கு ரியல் எஸ்டேட் மற்றும் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கலசலிங்கத்திற்கும் பழக்கம் ஏற்பட்டது. இவருக்கு சாந்தி மற்றும் பார்வதி என இரண்டு மனைவிகள் உள்ளனர். 

மூத்த மனைவி சாந்திக்கு வைரமுத்து என்ற மகன் உள்ளார். அவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கலசலிங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அவரது சொத்தை அடைய பார்வதி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.  இதுதொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஸர் முகமது கடையில் பணி செய்த பேட்டை பகுதியைச் சேர்ந்த பகவதி என்ற பெண் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டிலிருந்து வெளியேறியதால் தங்க இடமில்லாமல் தவித்து வந்துள்ளார். அவருக்கு அஸர் முகமது ஏற்பாட்டின் பேரில் பார்வதி வீட்டில் தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கோடீஸ்வரன் நகர் பகுதியில் இருந்து அஸர் முகமது நெல்லை பேட்டை விவிகே தெருவில் உள்ள பார்வதி வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சொத்து மற்றும் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்த போது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்ம கும்பல் அஸர் முகமதை கொலை செய்ய முயன்றனர். ஒருவழியாக அவர்களிடம் தப்பித்த ஓடிய அஸர் முகமதை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி சென்று படுகொலை செய்துள்ளனர். 
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios