Asianet News TamilAsianet News Tamil

மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி, குழந்தைகள் துடிக்க துடிக்க கொலை.. இறுதியில் ஐடி ஊழியர் விபரீத முடிவு.!

அப்போது வீட்டுக்குள் பிரகாஷ், காயத்ரி, குழந்தைகள் நித்யஸ்ரீ, அரிகிருஷ்ணன் ஆகிய 4 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

it employee commits suicide by killing wife 2 children in chennai
Author
Chennai, First Published May 28, 2022, 12:06 PM IST

சென்னை அருகே மனைவி, இரு குழந்தைகளை மரம் அறுக்கும் ரம்பத்தால் கழுதத்தை அறுத்து கொன்றுவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஷ்வரா நகர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (41). இவர் தனியார் ஐடி நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (39). இவர்களது மகள் நித்யஸ்ரீ (13), மகன் அரிகிருஷ்ணன் (9). இந்நிலையில், நேற்று இரவு பிரகாஷ் குடும்பத்தினருடன் தூங்கச் சென்றார். இன்று காலையில் அவர்களது வீட்டு கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை.

வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து அவர்கள் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப் பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் பிரகாஷ், காயத்ரி, குழந்தைகள் நித்யஸ்ரீ, அரிகிருஷ்ணன் ஆகிய 4 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மரம் அறுக்கும் ரம்பத்தால் அவர்களின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. வீடு முழுவதும் ரத்தம் வழிந்தோடி காணப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் பிரகாஷ் மனைவி, மகன், மகளை கொன்று தானும் தற்கொலை செய்தது தெரிய வந்தது. முதற்கட்ட விசாரணையில் முதலில் பிரகாஷ் மனைவி மற்றும் குழந்தைகள் ஒவ்வொருவரின் தலையையும் ரம்பத்தால் கொடூரமாக அறுத்துள்ளார். இதில் அவர்கள் 3 பேரும் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். அதன் பிறகு பிரகாஷ் அதே ரம்பத்தால் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios