திருச்சி மாவட்டம் மருங் காபுரி அருகே ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி 45 வயதான  இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் முத்து லட்சுமிக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வந்த குமார்  என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியது. 

இதையடுத்து இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் விவசாய வேலைக்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பகுதிக்கு இருவரும் வந்தனர். 

அங்கு  இருவரும் வேலை பார்த்து வந்த  நிலையில் மதுக்கூர் அருகே அண்டமி பாலத்தின் அடியில் இன்று காலை முத்துலட்சுமியும், குமாரும் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தனர்.

இதுபற்றி அந்த பகுதி மக்கள், மதுக்கூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கள்ளக்காதல் ஜோடி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

முத்துலட்சுமி மற்றும் குமாரின் கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததால் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகின்றனர்.  கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுக்கூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.