ஆம்பூர் அருகே புதைக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அருகே புதைக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் மாதனூர் அருகே வனப்பகுதியையொட்டி வனத்துறையினர் கால்வாய் ஒன்றை வெட்டி வைத்துள்ளனர். நேற்று முன்தினம் அந்த வழியாக ஆடு, மாடு மேய்க்க சென்றவர்கள் துர்நாற்றம் வீசுவதை கண்டு அருகில் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு பெண் உடல் புதைக்கப்பட்டு, அவரது சேலை மற்றும் காலின் ஒரு பகுதி வெளியே தெரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
செல்வி தலை நசுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பெண் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் சாராய பாக்கெட்டுகள் மற்றும் ஒரு ஜோடி காலணி இருந்தன. இறந்த பெண் பாலூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என துப்பு கிடைத்தது. அதன்படி பாலூரை சேர்ந்த அண்ணாதுரை மகன் ஆனந்தன் (20) என்பவரை அழைத்து சென்று இறந்தவரின் அருகே கிடந்த சேலையை காண்பித்துள்ளனர். அது தன்னுடைய தாயின் உடல்தான் என அவர் உறுதிப்படுத்தினார். 
இந்நிலையில் ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வி ஆம்பூர் அருகே உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்ததும், அதே கம்பெனியில் வேலை செய்து வந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக மாதனூரை சேர்ந்த அந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
