கள்ளக்காதலுக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாடகை வீட்டில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் ரெட்டியூர் பெருமாள் கவுண்டர் காலனியை சேர்ந்தவர் சங்கரலிங்கம் மகன் கோபிநாத் (வயது 31). இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி(33) என்பவருடன் கடந்த 19-ம் தேதி வீட்டை வெளியேறி தியாகதுருவத்தில் கணவன்-மனைவி என கூறிக்கொண்டு வீடு வாடகை எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் மாலை கோபிநாத், ராஜேஸ்வரி ஆகியோர் அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினர்.

 

இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் கதவை பலமுறை தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை. பின்னர் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது கோபிநாத், ராஜேஸ்வரி ஆகியோர் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு 2 பேரும் விஷம் அருந்தி வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தனர்.

 

இதனையடுத்து அவர்கள் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த வீட்டின் உரிமையாளரிடம் கோபிநாத் கொடுத்திருந்த முகவரியை வைத்து சேலம் மாவட்ட காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விசாரணையில் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் கோபிநாத்தை காணவில்லை என அவரது மனைவி உமாவும், ராஜேஸ்வரியை காணவில்லை என அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் அவரது கணவர் முல்லைவேந்தனும் புகார் கொடுத்திருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசாரின் விசாரணையில் தற்கொலை செய்து கொண்டது கள்ளக்காதல் ஜோடி என்பது தெரியவந்தது.

 

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தச்சுத்தொழில் செய்து வரும் கோபிநாத் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அன்னகாரபட்டியில் உள்ள முல்லைவேந்தன் வீட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது ராஜேஸ்வரிக்கும் கோபிநாத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த முல்லைவேந்தன் பலமுறை மனைவியை ராஜேஸ்வரியை கண்டித்துள்ளார். இதனையடுத்து கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற ராஜேஸ்வரி இதை சரியாக பயன்படுத்திக்கொண்டு கோபிநாத்துடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் பற்றி அறிந்த கோபிநாத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து ராஜேஸ்வரி-கோபிநாத் வீட்டை வீட்டு வெளியேறினர். அதன்படி கடந்த 19-ம் தேதி இருவரும் தியாகதுருகத்துக்கு வந்து கணவன்-மனைவி எனக்கூறி வீடு வாடகை எடுத்து தங்கினர். இந்நிலையில் உறவினர்களின் ஆதரவு இல்லாததால் மனஉளைச்சல் ஏற்பட்டு நேற்று முன்தினம் இரவு விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.