திருப்பத்தூர் அருகே மைனர் பெண்ணின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பிய திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி அமைப்பாளரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகன் அஜித். அவர் அதே பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணை கடத்தி சென்ற வழக்கில் கடந்த மாதம் போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளயே வந்த இவர் அதே பகுதியைச் சேர்ந்த வேறோரு 17 வயது சிறுமிக்கு செல்போனில், ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பி  பெண்ணின் புகைப்படத்தை தன்னோடு இணைத்து சமூக வளைதலங்களில் வெளியிட்டுள்ளார். இதனை தட்டிக்கேட்ட கிருஷ்ணமூர்த்திக்கு திமுக நிர்வாகி அஜித் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து,  உமராபாத் போலீசார் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி அமைப்பாளர் அஜித்தை போஸ்கோ மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர். பின்னர், ஆம்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.