Asianet News TamilAsianet News Tamil

Gokulraj Murder Case: கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு ஆணவ படுகொலை வழக்கு.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

 யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளி என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட 17 பேரில் 2 பேர் இறந்த நிலையில் 5 பேரை விடுதலை செய்து நீதிபதி சம்பத்குமார் உத்தரவிட்டார். குற்றவாளிகளின் யுவராஜ் உள்பட 10 பேருக்கான தண்டனை விவரம் 8ம் தேதி நீதிபதி அறிவிக்க உள்ளார். 

gokulraj murder case.. 10 people including Yuvraj are guilty.. court verdict
Author
Madurai, First Published Mar 5, 2022, 11:40 AM IST

பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளி என்றும் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ், நாமக்கல்லை சேர்ந்த சுவாதியை காதலித்து வந்தார். இருவரும்  திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தீரன் சின்னமலைக்கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் இருவரையும் மிரட்டி உள்ளார். பிறகு ஸ்வாதியை அனுப்பிவிட்டு கோகுல்ராஜை தன்னுடைய காரில் அழைத்து சென்றனர்.  பின்னர், மறுநாள் காலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. 

gokulraj murder case.. 10 people including Yuvraj are guilty.. court verdict

இந்த கொலை தொடர்பாக தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஜோதிமணி உள்ளிட்ட 2 பேர் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணையனது மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. 

gokulraj murder case.. 10 people including Yuvraj are guilty.. court verdict

சாட்சிகள் விசாரணை முழுமையாக முடிந்த நிலையில், சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளி என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட 17 பேரில் 2 பேர் இறந்த நிலையில் 5 பேரை விடுதலை செய்து நீதிபதி சம்பத்குமார் உத்தரவிட்டார். குற்றவாளிகளின் யுவராஜ் உள்பட 10 பேருக்கான தண்டனை விவரம் 8ம் தேதி நீதிபதி அறிவிக்க உள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios