புதுவையைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சங்கீதா(28). இவர்கள் இருவருக்கும் கடந்த 4 நான்கு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. சங்கீதாவின் தந்தை பாவாடைசாமி(58). பாத்திரம் தயாரிக்கும் தொழில் பார்த்து வந்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு அதிகமாக வரதட்சணை கேட்டு சங்கீதாவை ராஜேஷ் கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சண்டை நிகழவே சங்கீதா கடலூர் மாவட்டம் கண்ணாரப்பேட்டையில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

ராஜேஷுக்கும் சங்கீதாவும் விவாகரத்து வழக்கு தற்போது நடந்து வருகிறது. இதனிடையே ராஜேஷிற்கு இரண்டாவது திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளது. இது சங்கீதாவின் குடும்பத்திற்கும் தெரிய வந்துள்ளது. இந்தநிலையில் தான் சங்கீதாவும் அவரது தந்தை பாவாடை சாமியும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். அதன்படி இருவரும் வீட்டில் விஷமருந்தி மயங்கி கிடந்தனர். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

முதலுதவிக்கு பிறகு கடலூர் அரசு மருத்துவமனைக்கு இருவரும் கொண்டு செல்லப்பட்டநிலையில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதைக்கண்டு உறவினர்கள் மருத்துவமனையில் கதறி துடித்தனர். காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வரதட்சணை கொடுமையால் தான் இருவரும் தற்கொலை செய்தனரா? அல்லது வேறெதுனும் காரணமா? என காவலர்கள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

'வெறுப்பு அரசியலுக்கு டெல்லி கொடுத்த தண்டனை'..! பாஜகவை தாறுமாறாக விமர்சித்த ஜவாஹிருல்லா..!