Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் திமுக பிரமுகர் கொலை வழக்கு.. 4 பேர் அதிரடி கைது.. அதிர வைக்கும் பரபரப்பு தகவல்கள்..!

அதிமுகவில் இருந்த மதன் சமீபத்தில் திமுகவில் கட்சியில் இணைந்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தது தெரியவந்தது. அரசியல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் என்பது குறித்து விசாரித்து வந்தனர்.

DMK Executive murder case.. 4 people arrested
Author
chennai, First Published Feb 21, 2022, 12:20 PM IST

சென்னை திருவல்லிக்கேணியில் திமுக நிர்வாகி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.  

மறைந்த திமுக நிர்வாகியின் புகைப்பட திறப்பு விழா சென்னை பல்லவன் சாலை காந்தி நகரில் நடைபெற்றது. இதில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அவர் சென்ற நிலையில், சென்னையின் மிக முக்கிய பகுதியாக கருதப்படும் திருவல்லிக்கேணி பகுதியில் பல்லவன் சாலையில் திமுக நிர்வாகியான மதன்(32) என்பவர் சாலையில் நின்று கொண்டிருந்தார்.

DMK Executive murder case.. 4 people arrested

அப்போது கையில் பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வந்து இறங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியைடந்த மதன் அவர்களிடம் தப்பிக்க ஊடினார். ஆனால், அவரை விடாமல் ஓட ஓட விரட்டிய கும்பல் தலை கை மார்பு பகுதியில் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த மதன் சிறிது நேரத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அதிமுகவில் இருந்த மதன் சமீபத்தில் திமுகவில் கட்சியில் இணைந்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தது தெரியவந்தது. அரசியல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் என்பது குறித்து விசாரித்து வந்தனர்.

DMK Executive murder case.. 4 people arrested

இந்நிலையில், திமுக பிரமுகர் கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, தனது தாயுடன் மதன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இது தொடர்பாக இருவரையும் பலமுறை கண்டித்தும் தொடர்பு நீடித்து வந்துள்ளது. இந்நிலையில், தனது நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, வினோத், கணபதி, நரேன், உசேன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios